முத்தம் முன்னூறு சொல்லுது❤
காற்றான அவள் கடைக்கண்
மேகமான என்னை கலைக்க...
கன்னமான நிலத்தில்
இதழ் மழை பொழிகிறது...
காகித இதழின் மேனியில்
முத்தச் சித்திரம் சொருகி...
வெட்க நிறங்களை
கண்கள் அடுக்குகிறது...
புன்னகை பனிப்பூவை
இதழின் இடுக்கில் இடுக்கி...
மெளன கொடியில்
கணங்கள் படருகிறது
இருள் ஊற்றிய பொழுதில்
இரு மனதின் யன்னலில் இருந்து
காதல் மின்னல் மட்டும் அடிக்கடி
அலைக்கழிகிறது
(இஷான்)