பாலில் கலக்கத் தண்ணீர்

பாலில் கலக்கத் தண்ணீர்


தேரையர் வெண்பா

ஆடுபசும் பால்காய்ச்சி லஷ்டபா கம்புனலாம்
நீடெருமை செம்மறிக்கு நேர்நேராந் - - தேடரிய
சுக்கு காஞ்சொறிவேர் கூட்டி சுவரியப்பா
ஒக்கும்வெள் ளாட்டுபாற்க்கின் றோது

பசும்பாலில் எட்டுக்கொன்று தண்ணீர் கலக்கலாம். எருமைப்பாலிலும் செம்மறி யாட்டுப் பாலிலும்
சரிக்கு சரித் தண்ணீர் கலக்கலாம் எந்தப்பாலிலும் சுக்கும் சிறுகாஞ்சொறி வேரும் சேர்த்துக்
காய்ச்ச அது வெள்ளாட்டுப்பாலுக்கு நிகராம்.

எழுதியவர் : பழனிராஜன் (16-Jan-20, 3:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே