கொடுங்கோலன்

கொடுங்கோலன்
வெண்பா
சாதியை நீக்கச் சமத்துவம்கி டைத்திடுமாம்
சாத்திய மாகாது என்றுதான் - - சாதிச்
சலுகையீந்தார் ஏனோ கலக்கவேண்டும் சாதி
சலுகையும் வேண்டுமென் றார்

பள்ளத் திலிருப்போ னைத்தூக்க பள்ளத்தில்
கொல்லைமண் கொட்டிமே லேற்றலாம் - - கொள்ளை
சனத்தையும் கொன்றச் சடலங்கள் போட்டு
இனத்தை உயர்த்தல்நன் றன்று


படிக்காத மேதைகாம ராசர் எடுத்த
முடிவா மிதையறி யாமல் - அடுத்து
அரசேற்றார் யேதும் அறிந்திலர் போலும்
அரசை கெடுத்தாரே ஆட்டி

சட்டத்தை மீறி வளைத்துமக்கள் கட்டமும்
நட்டமுண ராதடிமை யாக்கிப் - - படுத்துகிறார்
சண்டாளர் சாதிசொல்லி சண்டைமூட்டி கொள்ளையிடும்
அண்டப் புளுகரைக்க ளையும்

எழுதியவர் : பழனிராஜன் (17-Jan-20, 10:25 am)
பார்வை : 64

மேலே