நீ எனக்கு பேரழகு

அழகா அழகா பூவ்வளாக
பூ வாசம் அது அழகா

கலை அழகா சிலை அழகா
சிலை வடித்த விரல் அழகா

செடி அழகா கொடி அழகா
இளந்தென்றல் நடை அழகா

வானம் அழகா நீளம் அழகா
நந்தவனம் அது அழகா

தேர் அழகா தெரு அழகா
தேர் இருக்கும் ஊர் அழகா

காய் அழகா கனி அழகா
செங்கனி தான் தனி அழகா

நதி அழகா நதி அழகா
நதி துள்ளும் நீர் அழகா
மதி அழகா விதி அழகா
விதி வெல்லும் மதி அழகா

கண் அழகா கண் அழகா
கண் காக்கும் இமை அழகா
விழி அழகா மொழி அழகா
விழி பேசும் மொழி அழகா

இதழ் அழகா இதழ் அழகா
இதழ் சிந்தும் தேன் அழகா
தேன் அழகா தேன் அழகா
தித்திக்கும் தேன் அழகா

அழகா அழகா அறிவுலக
பூ அழகா போட்டு அழகா
பொன் அழகா சொல் அழகா
நீ பேசும் சொல் அழகா

யார் அழகு யார் அழகு
யார் யாருக்கோ யார் அழகு
நீ அழகு நீ அழகு
நீ எனக்கு பேரழகு...

யார் அழகு யார் அழகு
யார் யாருக்கோ யார் அழகு
நீ அழகு நீ அழகு
நீ எனக்கு பேரழகு...

-- இப்படிக்கு அழகு

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (17-Jan-20, 11:04 am)
பார்வை : 2643

மேலே