மருத்துவ வெண்பா - ஒட்டைப் பால் – பாடல் 53

நேரிசை வெண்பா

ஒட்டைப்பா லுக்குமந்த மூர்வாத சூலையோ(டு)
அட்ட குணக்கரப்பா னார்வதன்றி - மட்டிடாக்
காதிரைச்சன் மந்தமதி காசஞ்சு வாசமுமாம்
மாதரைக்கு ணாளும் வழுத்து. 53

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

ஒட்டைப் பாலினால் அக்கினி மந்தம், வாத சூலை, எண்வித கரப்பான், கர்ண வாதம், செவிடு, அதி இருமல், இரைப்பு இவை உண்டாகும்.

உபயோகிக்கும் முறை:

இதனை உட்கொள்ள இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள துர்க்குணங்கள் உண்டாகும். ஆனால் தேகத்திலுள்ள விசக்கடியின் தீங்கை நீக்கும். இதனை வாயிலிட்டுக் கொப்பளிக்கச் சொத்தைப்பல் குணமாகும். சோபை, பாண்டு முதலிய ரோகங்களுக்கு நல்ல உணவாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-20, 10:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே