கனத்த தருணங்களில்

கனத்த தருணங்களில்......

----------------------------------------------------------------------ருத்ரா



ஒரு புல்

மண்ணிடம் சொன்னது.

"என்னை

கற்றை கற்றையாய்

முளைக்கவிடு.

இந்த மனிதர்கள் என்னை

மிதித்து விட்டுப்போகட்டும்.

உனக்கு வலிக்காது அல்லவா? "



கழுகு



ஆயிரம் அடி உயரத்திலிருந்து

பார்த்தது

மிக அழகான முயல் குஞ்சை.

ரசிப்பதற்கு அல்ல ...

புசிப்பதற்கு.



கணினி



கண்ணீர் விடாமல் சொன்னது.

உங்கள்

நகப்பிறாண்டல்களில்

நாளைய சரித்த்திரம்.

க்ளிக் செய்கிறேன் என்று

கிள்ளி கிள்ளி

நீ விளையாடினால்

என் முகமெல்லாம்

நட்சத்திர மண்டலங்கள்!


---------------------------------------------------------------------------------------

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (19-Jan-20, 6:27 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 115

மேலே