தும்பி,தன்னறம் – வேண்டுகோள்

மனதிலுதித்த எண்ணத்தின் போக்கில் செயல்பட்டுநிற்கும் மனிதர்களுக்கு காலத்தாலான புறக்கணிப்புகளும் நிராகரிப்புகளும் ஒவ்வொரு படிநிலையாக நிகழ்கிறது. அதன் பெருவலி பொறுத்து முன்னைவிட முனைந்து இன்னும் செயல்வேகம் கொள்வதென்பது, சுற்றியிருக்கும் வாழ்வுமனிதர்களின் நம்பிக்கையளிப்பைச் சார்ந்திருக்கிறது. இடர்கடக்க உதவுகிற இப்பெருஞ்செய்கை, எத்தனையோ செயல்தேக்கங்களை தாண்டிவிடுகிற உளப்பிடிப்பை நம்மையறியாமல் நல்கிவிடுகிறது. தமிழ் பதிப்பகச்சூழலில், அத்தகைய பொதுநம்பிக்கையினை தன்னறம் நூல்வெளியும் தும்பியும் அடைந்திருப்பது, வாழ்வுக்கான நன்றிக்கடனாகிறது.

தன்னறத்தின் ‘மீண்டெழ’ பதிவை மனமேற்று, கடந்த மூன்றுநாட்களாக, வெவ்வேறு ஊர்களிலிருந்தும் நண்பர்கள் தொகையுதவி அளித்திருந்தார்கள்.முதற்கட்டமாக, 100 வாசக உறுப்பினர்கள் இதுவரையில் தன்னறத்தின் மீண்டெழுகைக்காக உதவிபகிர்ந்திருக்கிறார்கள். அடையவேண்டிய இலக்கின் கால்வாசி தூரத்தைக் கடக்கவைத்துள்ளது, இத்தனை மனிதர்களின் துணையிருப்பு. இணையவேண்டிய கரங்களின் உதவிபகிர்தலும் இன்னும் அவசியப்படுகிறது. இக்காலகட்டத்தில், உங்களனைவரின் இருதயங்களுருவாக்கும் நற்சூழலின் கனிவு, நிச்சயம் தன்னறத்தை தன்னிலக்கு நோக்கி நகர்த்தும்.

தும்பி / தன்னறம் வங்கிக்கணக்கு விபரங்கள்:

THUMBI

Current A/c no: 59510200000031

Bank Name – Bank of Baroda
City – ERODE
Branch – Moolapalayam
IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)

உதவிபகிர விரும்புகிற தோழமைகள் மேற்கண்ட வங்கிக்கணக்கில் தொகை செலுத்திவிட்டு, 9843870059 என்ற தொலைபேசி எண்ணிற்கு உங்களுடைய முழுமுகவரியை அனுப்பவேண்டுகிறோம்.

கரங்குவிந்த நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி
9843870059

எழுதியவர் : தன்னறம் நூல்வெளி (26-Jan-20, 2:02 am)
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே