பரமரகசியம் 4

அண்டம் என்றால் என்ன

இன்றாவது இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது. இதுவே ஆண்ட
வனின் பரம ரகசியம். ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் வயது நூறு என்கிறார்..
மனிதன் சித்தர்கள் போலவாழ அஷ்ட மாசித்தி சக்தி பெறவேண்டும். அதற்கு
பல நூறாண்டு நாம் வாழவேண்டும். அதற்கு திருமூலர் கருக்கிடை 300 என்னும் நூலில்
சொல்லுகிறார்

தேகம் இருந்தாலோ சித்தெல்லா மாடலாம்
தேகம் இருந்தாக்காற் சேரலாம் பூரணம்
தேகம் இருந்தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம்
தேகமிருந்தாக்கால் சேரலாம் முக்தியே

மனித உடல் அழியாதிருக்க அகத்திய பரிபாஷை மூறாம் காண்டத்தில் 58 வது பாடலில்
கேளையா கயமது வச்சிரமாகுங்

கிருபையுடன் வல்லாரை கற்பங் கொண்டால்
ஆளையா மண்டலத்தில் சா வுபோச்சி
அறைவரிய சட்டைத்தள்ளிப் பூர்வமாச்சு
யேலையா சிவசக்தி தேகமாச்சு
எப்போதும் வச்சிரமா யிருக்கும்பாரு
கோளே து வாராது நான்சொல் வாக்கியங்
கொண்டவனே மெய் ஞான குணமுள்ளோன்

அகத்தியர் சொல்வதாவது காயகற்பம் சாப்பிட்டால் தேகம் வைரம் போலாகி உடலுக்கு
சாவே வராது. உடல் என்றும் நிலைத்திருக்கும் என்கிறார்.. உடல் ஏன் நிலைக்க வேண்டும்
நாமும் சித்தனாக சிவனாக வேண்டித்தான்.

எழுதியவர் : பழனிராஜன் (26-Jan-20, 8:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே