நான் மட்டும்

நேற்றைய நிகழ்வுகளை நாட்கள்
ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை
இன்றைய நிகழ்வுகளை வரவேற்றுவிட்டு
அமைதியாய் நகர்கின்றது நொடிகள்
நாளையைப் பற்றி கவலை கொள்ளாது
நான் மட்டும் நேற்று நடந்ததை எண்ணி
நிம்மதியை இழக்கின்றேன்
நாளையைபற்றி கவலை கொள்கிறேன்
ஆகையால்
இன்றைய பொழுது எனக்கு இறுக்கமாக