பழக்குங்கள் பண்பை

வெண்ணெய் திருடும் கண்ணனாக
வேடம திட்டுப் பிள்ளைக்கு,
கண்ணன் வந்தான் வீட்டுக்கென
களிப்பு மிகவே வாழ்த்துகிறோம்,
உண்மையில் திருட வந்தாலோ
உதவாக் கரையென ஒதுக்குகிறோம்,
பண்பை அன்பைப் பழக்கிடுங்கள்
பால வயதிலே பெரியோரே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Jan-20, 7:26 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே