அணுகுமுறை
ஆயிரம்தான் சொன்னாலும்
ஐரோப்பிய அணுகுமுறையை
நம் சமூகம் கற்றுக்கொள்ள
ஆயிரம் ஆண்டுகள் போதாது- இல்லை
மரபணு மாற்றம் செய்தாலுண்டு
வேங்கையென பாய்ந்து
வேரோடு அறுபடுவதே
விதியென்றானது
வில்லங்க தமிழனுக்கு!
முள்ளை முள்ளால்
எடுக்கத்தெரிந்தவர்கள்
கதிர்வீச்சால் உருவாகும்
புற்று நோயை
கதிர் வீச்சுக்கொண்டு
குணப்படுத்துவதைச் சொன்னேன்!
.....
29 தை 2020
ஐரோப்பிய நேரம்: 15 : 25