முதல் முறை

எப்பொழுது உன்னை பார்பேன்? உன் அமைதியான முக அமைப்பு பல குழப்பத்தில் இருக்கும் என்னை அமைதியாகும்! உன்னோடு பேசவும் வாய்பில்லை,உன்னை பற்றி மேலும் அறிய வாய்பும் இல்லை. உன் புன்னகையில் நான் என்னை மறந்தேன்,நீ உன் நண்பர்களோடு வாய்விட்டு சிரிக்கும் அழகை பார்க்கும்பொழுது நான் இங்கு வெட்கப்பட்டு தலை குனிவேன்! உன்னை பார்த்தவுடன் சட்டென்று வியர்க்கும் என் இரு கைகளும்,ஏதோ பெரிய தவறு செய்ததுப்போல் துடிக்கும் என் இருதய துடிப்பு,உன்னை பார்பதற்கு முன்பு தைரியமாக அங்கும் இங்கும் உலாவிய நான் உன்னை கண்டப்பின் வெட்கத்திற்கே வெட்கம் வரும் என்பதை உணர்ந்தேன்! இதை காதல் என்று சொல்லவா இல்லை உன்னிடம் ஏற்பட்ட ஈர்பு என்று சொல்லவா?

எழுதியவர் : ம.ஹேமாதேவி (4-Feb-20, 6:51 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : muthal murai
பார்வை : 278

மேலே