கூண்டுக்கிளி
கூட்டிலிருந்து வெளி வந்தது கூண்டுக்கிளி
கூட்டை அவன் திறந்து விட
பறந்துவிட மனதிலோ பேராவல் ஆனால்
சிறகிழந்தப் பின் பறப்பது எவ்வாறு
யோசித்தது கிளி அப்போது அங்கு
எங்கிருந்தோ வந்து கூண்டுக்கு கிளியின்
பக்கம் வந்து சேர்ந்தது ஓர் பச்சைக்கிளி
கிளிமொழியில் கூண்டுக்கிளிக் காதில் ஏதோ
'கீ' கீ என்று சொல்லி பறந்து சென்றது
கூண்டுக்கிளி இப்போது கிளி ஜோதிடன் கையில்..
அவன் சொன்ன எதையும் கேட்காது ...
ஜோதிடக் குறிப்பையும் அழகில் எடுக்காது
ஜோதிடன் விரலைத் தன அலகால் கீறியது
வலி தாங்காது அவன் அலறி கிளியைக் கீழே
வேகமாய்த் தள்ள .... கல்லில் மோதி
உயிரை விட்டது கிளி..... ஆம் சுதந்திரம் கேட்டு
கூண்டுக்கு கிளிக்கு அந்த பச்சைக்கிளி சுதந்திர
தாகம் எழுப்பிச் சென்றது ......
இறந்தது கூண்டுக்கிளி சுதந்திரத் தியாகி...
இப்படி 'ஒரு கிளியின் சோக கதையை ' எழுதிவைத்து
இறந்து கிடந்தாள் அவள் ....... கூண்டுக்கு கிளியாய்
'அவனுக்கு' அடிமைப் பட்டு காலமெல்லாம்
சிறகொடிந்த பறவைப்போல் தவிதவித்து....