நீயும் வலிகள்தான் கொடுத்தாய் 555

நினைவானவளே...



வலிகள் மட்டுமே நிறைந்த
என் வாழ்க்கையில்...


நீ வந்தாய் இன்பமெனும்
நந்தவனமாக...


முதல்முறை அனுபவித்தேன்
சந்தோசமென்னும் இன்பத்தை...


நீ மட்டும்
என்ன விதிவிலக்கா...


நீயும் மீண்டும்
வலிகள்தான் கொடுத்தாய்...


சேமித்து வைக்க நினைவுகள்
என்று என்னிடம் ஏதும் இல்லை...


என் குறையை
நீ தீர்த்தாய்...


எனக்கு உன் நினைவுகளை
கொடுத்து சென்றாய்...


கண்ணீரும்
எனக்கு புதிதல்ல...


நீ அதிகமாகவே
கொடுத்து சென்றாய்...


உன் பிம்பம் பதிந்த
என் விழிகளுக்கு.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Feb-20, 8:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1819

மேலே