கயல்விழி

நதிக் கரையோரம் அவள்
நதி நீரில் கால்கள் அமிழ்ந்திட
உச்சி வெய்யலிலும் குளிர்க் காய்ந்தாள்
நதி நீரில் வந்த கயலிரண்டு துள்ளி
குதித்து மேலெழும்பி பெண்ணிவள்
அழகு கண்களிரண்டைக் கண்டு
கயலென்றெண்ணியதோ தெரியலை
மேலே நீந்தி போகாது அங்கேயே
மீண்டும் மீண்டும் துள்ளி துள்ளி
மேலெழுந்து வந்து நின்றன இவள்
கண்கள் முன்னே ...... கயல்விழி
அவள் பெயர் கயலும் மயங்கும்
நயனங்கள் உடையாள்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (12-Feb-20, 3:54 pm)
Tanglish : kayalvizhi
பார்வை : 97

மேலே