என் அப்பா

நீர் சுமந்த குட்டி
எழுதும் ஒரு சில வரி.
கவி அல்ல இது
உன் வாழ்க்கை கவிதை
காவியமாக்க முயற்சி..!

ரத்தின சுருக்கமாக போச்சு
ரத்தம் எல்லாம் உழைப்பாச்சியே

என் வயிறு நிரப்பி
பார்த்து நீர் மகிழ்ந்தது
ஏராளம்.
ஆனால் அநேகமாக
நீர் பழைய சோற்று
தான் சாப்பிடீர்...

என் புத்திக்கு புதையலாக
நீர் கொடுத்த
உன் அனுபவக் கல்வியும்.
வாங்கிக்கொடுத்த கல்வியும்...

உழைத்தால் உய்யலாம்
என்று சொல்லாமல்
செய்து காட்டினார்.
அப்பதான் உறுப்படுயோம்
என்று நினைத்தீரோ..!

நான் பார்க்கும் வேலையை
சொல்ல தெரியாது
ஆனாலும் சொல்லி
மகிழ்வீர்

இலக்கியமமும் இதிகாசம்
தெரியாது என்பீர்
ஆனால் அதற்கு
இலக்கணமாய் வாழ்கிறாய்
நீ அப்பா...

-- இப்படிக்கு நீர் வளர்த்த குட்டி

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (20-Feb-20, 6:19 pm)
Tanglish : en appa
பார்வை : 4407

மேலே