இறக்கத்தானே பிறந்திருக்கோம்

பிறப்பதும் இறப்பது இயற்கை
வருவதும் போவதும்தான் வாழ்க்கை!

இரவு பகல் போல்
இன்பமும் துன்பமும்
மாறி மாறி வந்து செல்லும்
வாழ்க்கையில்....

தரம் என்பதும்
நிரந்தரம் என்பதும்
இவ்வுலகில் இல்லை

எதையும்
எதிர்கொள்ள துணிந்துவிட்டால்
மனக் கவலைக்கு இடமில்லை!

வருவது வரட்டும்
போவது போகட்டும்

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைபட்ட தூரம்தான்
வாழ்க்கை!

அதை
சரியாய் பயன்படுத்து
இன்முகத்தோடு
அனைவரிடமும்
அன்பு செலுத்து!

நீ சேமித்து வைத்திருப்பதை
உன்னால் எடுத்துச் செல்ல முடியாது

மாறாய்.......
புன்னகை பூத்து
இருப்பதை பகிர்ந்தளித்து
வாழ்க்கையை முழுமைபடுத்து!

இறக்கதானே பிறந்திருக்கோம்
இறக்கத்தோடு வாழ்ந்து செல்வோம்

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Feb-20, 7:01 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 192

மேலே