வேணும் வேணும்

பறவைப்போல வாழ வேணும்
பறந்து உலகை ரசிக்க வேணும்
பரிவு கொள்ளும் நெஞ்சம் வேணும்
பாவை மனதில் அமைதி வேணும்

எட்டுத்திக்கும் செல்ல வேணும்
எதிர்நீச்சல் போட வேணும்
என்னைநான் அறிய வேணும்
ஏக்கங்கள் தொலைக்க வேணும்

உலகை அன்பால் ஆள வேணும்
உவகை நானும் அடைய வேணும்
உள்ளத்தில் அமைதி வேணும்
ஊர் சிறக்க உதவ வேணும்

கருணை கொண்ட கண்கள் வேணும்
கவலை மறக்கும் துணிவும் வேணும்
கருத்தாய் கடமை ஆற்ற வேணும்
காலம் அதனை போற்ற வேணும்

வங்கக்கடல் கடக்க வேணும்
வளங்களைப் பார்க்க வேணும்
வன்மங்கள் துறக்க வேணும்
வாடும்பயிர் காக்க வேணும்

தும்பைபோல் மனசு வேணும்
துணிந்து செயல் செய்ய வேணும்
துக்கம் அதனை மறக்க வேணும்
தூக்கம் என்னை தழுவ வேணும்

எழுதியவர் : திருமகள் மு (25-Feb-20, 4:34 pm)
சேர்த்தது : திருமகள்
பார்வை : 147

மேலே