நட்பு
அவள் தந்த அழகிய நினைவுகள்
என்னுள் எத்தனை மாற்றங்கள்
அவள் தந்த அறிவுரைகள் அத்துனையும் அவளுடன் என்னை ஈர்த்தது...இன்றும்கூட என் வாழ்வின் துணை .... அவள் என் நினைவில் கலந்துள்ள.. என் முடிவுகளை அலசி ஆராய்ந்து கருத்து சொல்லுவாள்..
நானும் அவளும் கல்லூரிசுற்றுலாவில் கலந்து கொண்டோம்... மூன்று நாட்கள் அவளோடு பயணித்தேன்..
அப்பா இன்றும் அவளோடு பயணித்த அத்துணை நொடிகள்
மனம் இலேசாகி மனம் அவளுக்கு அருகே கொண்டு செல்கிறது... அவள் என் அருகே நான் சன்னல் அருகே அவளோடு கைகளை பிடித்து கொண்டு எங்கள் பயணம் நடந்தது..பேச ஆரம்பித்தோம்..என் பள்ளி பருவம் என்னோடு வருங்கால நினைவுகள் என பல பகிர்ந்தேன்..
நானும் அவளும் பேச ஆரம்பித்தவுடன் என் மற்ற தோழிகளுக்கு பொறாமை ஏற்படும்..
அன்று இரவு நேரம் பேருந்து பயணம்
அவள் கன்னங்களில் நான் முத்தம் இட்டேன்.. என்றும் நினைவில் இருக்கும் ஒரு தருணம் அது.... அவளுக்கு நான் கொடுத்த முதல் பரிசு... ஆனால் அவளுக்கு முத்தம் பிடிக்காது... என் பேருந்து பயணம்
அவள் என்னோடு இருந்த அந்த நிமிடங்கள் நான் செல்லும் ஒவ்வொரு பேருந்து பயணங்களும் நினைவூட்டும்...

