பொண்டாட்டிக்கு செய்த சத்தியம்

என்னங்க... துறவின்னா
எல்லாத்தையும் துறந்துட்டு வாழறது மட்டுமில்ல..
ஏதாவது ஒரு கெட்ட விசயத்தை துறந்துட்டு வாழறதும் துறவுதான்...

ஆமா டார்லிங்...
இப்ப அதுக்கு என்ன...?

ஒவ்வொரு வருசமும்...
ஏதாவது ஒரு கெட்ட விசயத்தை துறந்துடுவேன்னு சத்தியம் பன்னுவீங்களே....

ஆமா... சொன்ன..

இந்த வருசம் எந்த கெட்ட விசயத்தை விட போறீங்க...?
போனவருசம் கோபத்தை விட்டுறன்னு சொன்னீங்க...
ஆனா... இன்னும் கோபம் அப்படியே தானே இருக்கு...

டார்லிங் கோபங்கிறது...
கிரடிட் கார்டு லோன்மாதிரி...
அவ்வளவு சீக்கிரத்துல குறையாது...
கொஞ்சம்... கொஞ்சமாத்தான் குறையும்...

இந்த உதாரணத்துக்கு குறைச்சில் இல்ல...
முதல்ல...
இந்த வருசம் எந்த கெட்ட விசயத்தை விட போறீங்கன்னு சத்தியம் பன்னுங்க...?

இந்த வருசமா...
இனிமே செல்போனஅவசியத்துக்கு மட்டும்தான் யூஸ் பன்னுவ...
அநாவசியத்துக்கு யூஸ் பன்னமாட்ட...

என்னங்க..
நீங்களா சொல்றீங்க....?

ஆமா...
நானேதான்...
நிச்சயமா...
இத ஃபாலே பன்னுவ...

பாா்க்கலாம்...
எத்தனை நாளைக்குன்னு...

கண்டிப்பா டார்லிங்...

ம்...
பாா்க்கலாம்...பார்க்கலாம்...
இந்தாங்க...
உங்க லன்ச் பேக் ரெடி..
நீங்க ஆபிஸ் போகலாம்...

ம்... ஓகே..
நான் வர

ம்.... பத்திரமா போயிட்டு வாங்க...

( அன்று அலுவலகம் முடிந்து இல்லம் திரும்பியவுடன் )

என்னங்க
வெரி குட்..
இன்னிக்கு உங்க டேட்டா 'ஆஃப் லைன்'லியே இருந்திச்சு....
போனையே யூஸ் பன்னல போல...

ஆமா... டார்லிங்....
யூஸ் பன்னல..

ம்.. வெரி குட்

சரி டார்லிங்...
ஏதாச்சும் வேலை இருக்கா...?

பாா்த்தீங்களா...
போனை யூஸ் பன்றது நின்னதும்...
அடுத்த வேலைய யோசிக்கீறீங்க...

ம்... ம்...
வேலை இருந்தா சொல்லு டார்லிங்..


ம்... இந்தாங்க...
நீங்க என்ன வேலை செய்யனும் அப்டின்னு முன்னாடியே எழுதிட்ட...
நீங்க மறந்திடுவீங்களா அதான் எழுதி வச்சிட்ட..

சரி... சரி.. கொடு...
முடிஞ்சவரைக்கும் செய்யுற...

( சில மணி நேரம் கழித்து... )

டார்லிங்...
நீ சொன்ன வேலைய முடிச்சிட்ட...

வெரி குட் டியர்
வாங்க இப்ப சாப்பிடலாம்...
...........
...........
என்னங்க...
நீங்க இன்னிக்கு போல...
எல்லா நாளும்... இருக்கனும்...

ம்... இருக்கலாம்....இருக்கலாம்
சீக்கிரம் சாப்பிட்டு தூங்கலாம்...
நேரமாச்சு....

பார்த்தீங்களா...
இப்ப கூட பொறுப்பா பேசுறீங்க...

ம்...
போக... போக... தெரியும்...

என்னங்க சொன்னீங்க...?

ஒன்னுமில்ல... சும்மா... பாடின...

சரி தூங்க போகலாம்...

( இரவு முடிந்து.... மறுநாள் காலையில்... )

என்னங்க... நேத்தே சொல்லனும்னு இருந்த...
என் போனுக்கு வேலிடிட்டி முடிஞ்சு போச்சு...
உங்க ஃபோன கொடுங்க...
எங்க அம்மாக்கு ஒரு ஃபோன் பன்னனும்...

என்னங்க..
உங்களத்தான் ஃபோனை கொடுங்க...
திருதிருன்னு...
திருடமாதிரி முழிச்சுகிட்டு...

அதுவந்து... டார்லிங்...

என்ன போனை கேட்ட இழுக்கீறிங்க...
அதா அவசியத்துக்கு யூஸ் பன்னலான்னு சொல்லிட்ட -ல...
போனை கொடுங்க...

அது வந்து டார்லிங்...
போன் மிஸ் ஆயிடுச்சு...

அடப்பாவி...
எனக்கு அப்பவே டவுட்டாச்சு...
என்னடா.. வேலைய தானே கேட்டு செய்யுறான்னே... அப்டின்னு...
நான் அப்பவே நினைச்ச...
ரொம்ப கொயிட்டா இருக்கான....
இவன நம்பலாமா... அப்டின்னு...
எருமை... எருமை..
எப்படி நிக்குது பாரு...
போன் யூஸ் பன்றதா விடுடான்னா...
போனையே விட்டுட்டு வந்து நிக்குது...

அது இல்ல...
என் செல்ல டார்லிங்...

அப்படி கூப்பிடாத
'செல்'ல துளைச்சிட்டு...
செல்ல டார்லிங்க..
நீ மாறவே மாட்ட...
எக்கேடு கெட்டுன்னு போ.....

( அந்த நாள்... அந்த நிமிஷமே ஒரு முடிவுக்கு வந்த... எனக்கு நானே ஒரு சத்தியமும் செய்துகிட்ட... "இனிமே பொண்டாட்டிக்கு சத்தியமா , சத்தியம் பன்னக்கூடாதுன்னு..." வாங்கின திட்டு அப்படி...)

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (2-Mar-20, 3:18 pm)
பார்வை : 232

மேலே