வாழத்தெரியாத மனிதன்
நீச்சல் தெரியாத மீன் நான்!
பறக்க தெரியாத பறவை நான்!
துடிக்க தெரியாத இதயம் நான்!
சுடத் தெரியாத சூரியன் நான்!
காமம் தெரியாத காதல் நான்!
இலக்கணம் தெரியாத கவிதை நான்!
மறக்க தெரியாத மனம் நான்!
பொறாமை தெரியாத பாசம் நான்!
ஆராய தெரியாத அறிவு நான்!
ஏமாற்றம் தெரியாத நம்பிக்கை நான்!
காயங்கள் தெரியாத வெற்றி நான்!
அவமானங்கள் தெரியாத அனுபவம் நான்!
மொத்தத்தில் இவ்வுலகில் வாழத்தெரியாத மனிதன் நான் !!