விதியை மாற்று

விதியை மாற்று ...
வீறுகொண்டு எழுந்திடு
விதியை மாற்றிடலாம்
சாத்திரம் வேண்டாம்
சரித்திரம் படைப்போம்
சமுத்திரமும் வாயடைக்கும்
உன் சாதனை கண்டு
நம்பிக்கையோடு நீ இருந்தால்
விண்ணைக்குடையட்டும்
உன் முயற்சி - விடாது செய்
நாளும் நீ பயிற்சி
தோல்வி கூடாரங்களில்
வெற்றி விளக்கொளிரட்டும்
கண்களை மூடிக்கொண்டு
உலகிருட்டென்று ஒப்பாரி வைக்காதே
புதிய பாதை உருவாக்கு - அதற்காய்
உன்னையே நீ உருக்கு
கோழையாய் இருக்கும்வரை '
கொத்திமகிழும் கோட்டான்களும்
கழுகுகளும்
எதிர்த்து போராடு
எமன்கூட எட்டி இருப்பான் .
இவன் மு.ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (3-Mar-20, 4:39 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : vithiyai maatru
பார்வை : 144

மேலே