கோடான கோடி நன்றிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
நாள் பார்க்கவில்லை நட்சத்திரம்
பார்க்கவில்லை
நாம் பார்த்துக்கொண்டோம் மலர்ந்த நான் மணம்பரப்ப
துணிந்து தேன் குடிக்க வந்தமர்ந்து
வான்பார்த்த என்னை சூல்கொள்ள வைத்து
தாய்மையை எனக்கு தந்து வாய்மை
தவறாது
என்னைக் காப்பவனே உனக்கு கோடான கோடி நன்றிகள்