எஞ்சோட்டு கிளியே

எஞ்சோட்டு கிளியே...
நாத்து நட்டு போறவளே - என்ன
பாத்து கொஞ்சம் போனா என்ன
காத்துக்கிடக்கேன் ரொம்பநேரமா
உன்ன பாத்து கொஞ்சிபேசிடத்தான்
சீண்டி வம்புவேண்டாமய்யா - உன்ன
வேண்டிநானும் கேட்டுக்கிறேன்- சொல்ல
தாண்டி உன்னப்பாத்தா சுட்டுப்புடும்
என் அப்பன் உன்ன
போடி போடி பொசக்கெட்டவளே
கண்ணாளத்தான் சுட்டுப்புட்ட
உன்நெஞ்சுக்குள்ளத்தான் வச்சிபூட்டிக்கிட்ட
நான் சுட்டாலும் சாகமாட்டேன்
உன்னைவிட்டு போகமாட்டேன்
வீம்பாக திரியாதையா
கொலைவெறியில சுத்துறானுங்க
என்கூடப்பொறந்தவங்க -கொண்டுபோகத்தான்
உன் தலைய
பயமுறுத்தி பாக்குறியா - இல்ல
பரிட்சைத்தான் வக்கிறியா
மோசமுன்ன பண்ணமாட்டேன்
என்நேசத்தத்தான் புரிஞ்சுக்கோடி
ஆசைகாட்டி என்னத்தான் அழகா நீயும்
மயக்குற அரிதாரம் பூசாமத்தான்
நல்லா நீயும் நடிக்கிற
வேண்டாமுன்னு சொல்லுறதுக்கு
காரணம் உண்டா புள்ள - கல்யாண
தோரணம் கட்டி வாழ கோடி ஆச நெஞ்சிக்குள்ள
உசுருக்குள உன்னத்தச்சி நான் வாழுறேன்
உன்னைவிட்டு போகச்சொன்னா
எப்படித்தான் வாழுவேன்
மச்சிவீட்டுல வச்சியுன்ன வாழவைப்பேன்
உச்சிமுதல் பாதம்வரை அலங்கரிச்சி
நான் ரசிப்பேன் - ஒருபோதும்
உன்ன நீங்கமாட்டேன் - நீங்கினா
வாழமாட்டேன் - ஏண்டிப்புள்ள தயங்குற
ஏனோ என்ன வெறுக்குற -ஊருகுத்தம்
சொல்லுமுன்னா இல்ல எனக்குள்
ஊனம் ஏதும் இருக்குமுன்னா
சாவடிக்காத உன்சொல் சாட்டையால
சாத்தியமா சொல்லுறேன் நீதான்யா
என்புருஷன் - உன்ன பாத்த அந்த கணம்
பறிபோச்சு என்ற மனம் -உள்ளுக்குள்ள
உன்னவச்சி தெனம் பூச செய்யுறன் - உன்ன
இழக்க கூடாதுன்னு உலக கடவுளெல்லாம்
வேண்டுறேன் - இம்புட்டு ஆசைவச்சிகிட்டு
ஏண்டி புள்ள தள்ளுற -பேசாம கொள்ளுற
சாதிவெறி குடும்பத்துல பொறந்துட்டன்
உன்ன சாகடிக்கம்முன்னுதான் ஒதுங்கிட்டேன்.
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (5-Mar-20, 3:39 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 82

மேலே