அனாதை ஆக்கப்பட்டவள்

பாவி நீ பாதகத்தீ !!!!!
பாவம் செஞ்சவ நீ தானே?
பலியாடு நானா?

நீ பிரசவித்த வலியை விட
பெரு வலி நானறிந்தேன்..

இந்த பிஞ்சி நெற்றியில் முத்தமிட
உன் இதழ்கள் முன்னுக்கு குவியலயா...

கட்டி அணைக்க உன் கைகள்
இரண்டும் தேடலையா..

கத்தி அழுகிறேனே கரம் பிடிக்க
ஆளிலலையே...
சுத்தி பார்த்தாலும் சொந்தபந்தம்
ஏதுமில்லையே..

பச்சப்புள்ள வயித்த பசிவந்து
கிள்ளுதடி....
பட்டினியா கிடக்குறேனே...

பத்தி எரியலயா உன் பெத்த வயிறு
.
. பாவி நீ பாதகத்தீ !!!!!
பாவம் செஞ்சவ நீ தானே?
பலியாடு நானா?

கருவிலே கலைத்திருந்தாலும்
குறை பிரசவத்தில்
உருக்குலைந்து போயிருப்பேன்...

பெத்தவளே பெத்த பின்னாவது
பிணமாக்கி போட்டிருந்தாலும்
செத்து போயிருப்பேன்
சில நேர வலியோடு.. ..

ஏனடி என்னை பெற்றாய்?
விதியின் கையிலே
விளையாட்டு பொம்மையாய்
விட்டுவிட்டு சென்றாய்....

இப்போ வீதியிலே கிடக்குறேனே
குப்பை தொட்டி குழந்தையாய்....

வாழ்க்கை முழுவதும் வெறுமையாய்
நான் வாழப்போகிறேன் நரகமாய்...

எழுதியவர் : Karikayal (14-Mar-20, 10:34 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
பார்வை : 156

மேலே