யாரெமக்கு நாதி இரங்கற் பா
யாரெமக்கு நாதி
நினக்கிரங்கற் பாபாட ஈசன் எனைப்பணித்தான்
நினைப்பாடி நூல்எழுத ஆசை -- எனக்கும்
அனைத்தும் எழுதினேன் என்மனதில் உம்மை
நினைக்கும் பிறர்க்கே யிது
இளவயதில் தந்தையிழந் தார்தைரிய முந்தான்
தளராத்தாய் கல்விதர நண்பர் -- வளர்ந்தார்
இளவரசாய் சென்னையில் கல்விகற்க வேலூரில்
பள்ளியாசா னாய்சேர்ந்தா ராம்
திருமலையான் பள்ளி திருப்திப் பணியாம்
அருமை பலருமே போற்ற --- கருணையாய்
இல்லார்கு மெல்லா உதவிநல்கிப் பின்னும்
கல்வியீந்தார் என்னே பெருமை
ஆத்ம திருப்தி பரோபகாரம் ஆத்மபணி
ஏத்தினார்புண்யம் அறியாமல் --- பார்த்துப்
பலஉதவி பள்ளிப்பட்டில் கோயில் பணியும்
கலகலப்பாய் செய்தாரூ ரில்
(அகரம் பள்ளிப்பட்டு)
நின்பெற்றோர் வைத்தார் குணம்குறிக்க பொன்முடி
நின்பன்மு கம்தெரியா வைத்தாரோ --- என்ன ?
நவரத்தினம் கூட்டிப் பதித்தாய் முடியில்
அவமற்ற பொற்குன்றே நீயும்
தாய்க்கொரு பிள்ளைநீர் தாய்க்கோர் மகளவர்
வாய்த்தார்நின் நல்மனையாய் பாக்யமே -- சேயெனநீ
தாயார் கழனிகாத்தாய் மக்கள் இருவருடன்
வாயாரப் போற்றுதுவும் ஊர்
மாநிலத்தில் நாலும் புரிந்தனையுன் நண்பரும்
நாணுவர் யார்க்குண்டு நின்னிரக்கம் --- நானுமே
நாணல் வளைதூணே ஐயோநீ யேன்போனாய்
வானுலகு யாரெமக்கு நாதி