காதல் ♥️காமம்
காதல் ♥️காமம்
காதல் கனிந்த
உயிர்கள் இரண்டு
மோகத்தில் மூழ்கியது.
பழம் நழுவி அது பாலில் விழுந்தது.
பூத்து குலங்கிய மலரை ரீங்காரமிட்டு
வண்டு வட்டமடித்தது.
நிலவு அதை மேகம் ஆசை தீர தழுவியது
தீராத தாகத்துடன் இதழ்கள் காத்திருந்த
இன்பத்தை பருக
உதடுகள் துடித்தன, தவித்தன.
இறுக்க அனைத்த
இரு உள்ளங்கள்
ஓர் உயிர் ஆகி
இன்பத்தில் ஆற்றில் மிதந்தது.
இடையை வளைத்து கரங்கள்,
இனிமையை தேடியது.
ஆடை மறந்த உயிர்கள்,
உலகை மறந்தன.
மோகம் அது
முக தரிசனம் செய்ய,
காமம் அது கனிசமாக பயணிக்க,
சிற்றின்ப வாசல் சிறப்பாக திறந்தது.
காமபாடம் சீறிய முறையில் பயில,
காமதேவன் பல்கலைக்கழகத்தில் காம பட்டம் பெற்றிட முயற்சித்தன.
ஆயக்கலைகள் அறுபத்து நான்கும்
சிந்தாமல் சிதறாமல்
அறுவடை செய்ய துடித்தன.
மானுடம் இரண்டும் மோக உலகிற்கு காம சிறகுடன் பயணம் செய்தன.
மஞ்சத்தில் மயங்கிய மானுடம்
மயக்கம் எதுவரை?
காம போதை தெளியும் வரை
மோக முகமூடி கலையும் வரை
ஆசை தீ அனையும் வரை.
காமம் கரை சேரும் வரை
மோகம் முடியும் வரை.
- பாலு.