காலச் சக்கரம்
கட கட வண்டி
கரூரு போகும் வண்டி
கடலை மூட்டை ஏத்திகிட்டு
கருக்கலிலே போகும் வண்டி
கடமொலை கலன்டுக்கிட்டு
காவிரியில் விழுந்த வண்டி
காயம்பட்ட வாழ்க்கையில
கண்ணீரோடு நிக்கீறேனே
கட்டபொம்மனா வாழ்ந்த நானும்
காலத்தோட சுழற்சியில
அச்சாணியை தொலைத்துப்புட்டு
ஆத்தோரம் நானும் போனேன்
என் ஆத்தாவை எரியூட்டி
அப்பானு வந்து நின்றான்
என்னோட காலச் சக்கரம்
உலகமறிந்த உலகநாதன்.