கொரோனாவின் தீமையும் நன்மையும் கவிஞர் இரா இரவி

கொரோனாவின் தீமையும் நன்மையும் ! கவிஞர் இரா .இரவி !

சுறுப்பானவர்களையும் சோம்பேறியாக்கியது
சும்மா இருக்கும்படி இல்லத்தில் முடக்கியது !

நேரம் போதவில்லை என்று சொன்னவர்களை
நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது !

மேல்நாட்டு பாணியில் கை குலுக்கியவர்களை
நம்நாட்டு பாணியில் வணங்கிட வைத்தது !

கை கால் கழுவாமல் உண்ணும் பலரையும்
கை கால் கழுவிய பின் உண்ண வைத்தது !

சுகாதாரத்தின் பயனை உணர்த்தியது
சுத்தம் சுகம் தரும் அறிவுறுத்தியது !

மரணபயத்தை எல்லோருக்கும் காட்டியது
மனதில் பயத்தை எல்லோருக்கும் விதைத்தது !

உணவின் அருமையை உணர்த்தியது
உழவனின் பெருமையை உணர்த்தியது !

பணத்தை உண்ண முடியாது காட்டியது
பணக்காரனையும் வீட்டில் முடக்கியது !

கோயில்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன
கடவுள்களுக்கும் வழங்கப்பட்டது கட்டாய ஓய்வு !

பள்ளிவாசல்கள் யாவும் இழுத்து மூடப்பட்டன
பாடல் ஒலிப்பும் உடன் நிறுத்தப்பட்டன !

தேவாலயங்கள் யாவும் இழுத்து மூடப்பட்டன
தேவ பாடல்களும் உடன் நிறுத்தப்பட்டன !

குடும்ப உறுப்பினர்கள் யாவரும் பேசிக் கொண்டனர்
குடுமபத்தில் பாசம் நேசதிற்கு நேரம் கிடைத்தன !

தொலைக்காட்சிக்கு சண்டையும் நடந்தன
தொல்லைக்காட்சியும் நேரம் கடத்தியது !

அலைபேசியில் தேய்த்து ரேகை அழிந்தது
அலைபேசியும் போரடிக்க ஆரம்பித்தது !

தூரத்தில் இருக்கும் உறவுகள் நினைவில் வந்து
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர் !

புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்கள் எல்லாம்
புதிதாகவே இருந்தன பிரித்துப் படித்தனர் !

உணவகத்தை நம்பி இருந்தவர்கள் எல்லாம்
உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் !

தினக்கூலி பெற்றவர்கள் எல்லாம் வருமானமின்றி
தினமும் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர் !

வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்த ஜோடிகள்
ஒரே ஊரில் சிலர் இணைத்து விட்டனர் !

வேறு சில ஜோடிகள் சேர முடியாமல்
வெவ்வேறு ஊர்களில் வருந்தி வருகின்றனர் !

உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருந்தால்
உன் இல்லம் விட்டு வராதே உணர்த்தியது !

உலகில் பல உயிர்களை பலி வாங்கி
உயிரின் மதிப்பை உணர்த்தி விட்டது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (26-Mar-20, 6:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 165

மேலே