கையில் ஆடும் மதுபானம் மானம்

கண்ணாடி குவளையில் தட்டு தடுமாறி நிக்கிறான் - சிகப்புநிற
ஆடை உன்னை நாட வைக்கிறதடி
உன் கையில் உள்ள மது - உன்னை
பற்றி கதை கதையை சொல்லுதடி

கரி கட்டையை போகும் முன் - கொல்லி
கட்டையை விரும்பும் விரல்கள்
விடலை வயதில் மதுவை விரும்பும் மாது - எவர்
சொன்னாலும் கேக்காத காதுகள்

மது தொண்டையில் கசக்க மனசு பறக்க - உன்னை
கட்டி அணைக்க நீ உத்துழைக்க மனசும் மாறுதோ
என் எதிரிலுள்ள மது தண்ணீரால் - என்
எண்ணங்கள் கூவம் தண்ணீரையை மாறுதோ....

புகையை கெண்டு வரும் கனவு - நிகழ்வு
ஆகாது என்று தோன்றவில்லை

தோல் மீது உள்ள ஆசை வேரும் தோல்... - என
தோல் சுருக்கும் போது தான் தெரிகிறது
இளமை என்னும் பூ காற்று - தண்ணீரை
தேடும்போது குடும்பங்கள் கண்ணீரால் வாடுகிறது..


மு.க. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு.க. ஷாபி அக்தர் (27-Mar-20, 2:03 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 212

மேலே