தவம் இருப்பேன் தவம் தவமாய் -1
என்னை நீ ஒரு கணம் பார்க்க தவம் இருப்பேன் தவம் தவமாய் ....
கண்ணுள் கண் கொண்டு பேசும் போது - உன்
கண்னே அழகு என தோணுதடி
என்னை கண்ட போது நீ தரையில் - உன்
கட்டை விரலால் வரைந்த கிறுக்கல் - அது
தான் மிக சிறந்த ஓவியம் அடி......
நான் தேனீ போல் இருப்பன் - உன்
உதட்டில் உள்ள தேன் அருந்த
நான் ஒரு போராளி - நாம்
மெளனம் சண்டையில் போர் செய்வேன்
நிலவின் மடியில் தினம் தினம் ...
காமம் என்னும் உறவை தாண்டி வெல்லுவோம்
இந்த உலகை வெல்லுவோம் - உன்
மடியில் என் தலை வைக்கும் நொடியில்
தவிடு பொடியாய் நொறுக்கி போவேன் .
அடுப்பாங்கரையில ஊதங்குழல் ஊதையில
நெருப்பும் நடனம் ஆடையில
பாலும் பொங்கும் வேலையில
பால் பானையை ஊதையல
பொங்கும் பாலும் அடிமை - ஆகுதடி
உன் மூச்சு காற்றால
இதை கனவே தவம் இருப்பேன் - அதிகாலை
வேலையில தவம் தவமாய்.....
மு.க. ஷாபி அக்தர்