வல்லினம்
சொல்லில் ஏனோ சுகமும் இல்லை, சொல்லி பார்த்தால் சொந்தம் இல்லை
சொல்லிடும் நேரம் சுவையும் இல்லை, மற்றவை போல் ஏனோ நீயும் இல்லை
தனிமையின் வாசம் சூழ்ந்துகொள்ள, தற்பெருமை ஏதும் உன்னில் இல்லை
தனித்தே நிற்கும் உனக்கோ ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
வலிகள் ஆயிரம் விழியில் கரைய, உன் உதடுகள் உதிர்த்திடும் பொய்யில்
வலிமை இழந்து கிடக்கிறேன், உன் விரிந்த விழிகள் பார்க்கையில்
எல்லாம் ஒன்றாய் நகர ஏனோ நீ மட்டும் தனியாய் சிதற
என் பார்வை சிறையில் அகப்பட்டாயே அது விதி என்று நான் அறிவேனோ
சிறிதும் சோகம் காண உன் உதடுகளுக்கு தெரியாமல் போகிறதோ
சிதைந்து கிடைக்கும் உன் இதயத்தின் வலிகள்
நீரில் ஊறி போன உன் விழிகளுக்கு மறந்து போனதோ
நீ இல்லாமல் நான் இல்லை என்று சொன்ன மாய வார்த்தைகள்
தொலைவில் இருக்கும் பொக்கிஷமே, தொலைந்து போன காவியமே
தொல்லியல் துறைக்கும் துளங்காத நீ என் வல்லினமே.