என் கவிதைப் பயணம் - 1

நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் காலத்தில் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டு போவது வழக்கம். அப்போது கடையில் செய்தித்தாள் படிப்பதுண்டு. அதன் கூட வரும் இதழ்களில் கவிதைத் துணுக்குகள் இருக்கும் அதைப் படிப்பது மிகவும் பிடிக்கும். அப்போது கவிதை எழுதியது கிடையாது.

பின் ஒன்பது, பத்து வகுப்புகளிலும் வார இதழ்களில் வரும் கவிதைகளைப் படிக்கும் வழக்கம் தொடர்ந்தது. நீங்கள் நம்ப மாட்டீர்கள், அப்போது வெளிவந்த இதழில் நான் விரும்பிப் படித்த ஒரு கவிதையின் பக்கம் இன்றும் என்னிடம் இருக்கிறது. அன்றைய காலத்தில் பாட்டுப் புத்தகம் வாங்கிப் பாடலைப் பாடி பார்ப்பது என்பது எல்லாரும் மிகவும் விரும்பிய ஒன்று. எனக்கும் தான். அந்தப் பாடல் தெரியுதோ?... இல்லையோ?... வரிகள் மனதை ஏதோ?... செய்துவிடும்.

இப்படி தொடங்கிய வாசிப்புப் பயணம் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போது பாட்டுப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரிகள் இருக்கும். அந்த வரிகளை எடுத்துக் கொண்டு, அதில் இடையில் சில வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஏதோ?... சாதித்தது போன்று இரசித்ததுண்டு.

பின் கல்லூரியின் இறுதி ஆண்டில்(2013) கவிதை எழுதத் தொடங்கினேன். முழுவதும் என் சொந்தக் கற்பனையில் எழுதியது. அந்த வரிகள் இதோ?...

"உன்னைப்
பார்க்கத் துடிக்கும் கண்களுக்கு
எப்போது
உயிர் கொடுப்பாய்..."

இதுப் போன்று சிறு சிறு கவிதைகள், இதுதான் கவிதையென்று தெரியாமல் எழுதியதுண்டு. அப்போது எனக்குள் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும். திரையிசை பாடலில் இருபது இருபத்திநான்கு வரிகள் கொண்ட கவிதையை எப்படி எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தான் அது. அதனாலே அதன் பின் நான் எழுதிய கவிதைகள் எல்லாம் பாடல் வடிவில் இருக்கும். ( 8 12 12) இந்த நடையில், அதாவது முதலில் எட்டு வரி, பின் பன்னிரண்டு வரி, பின் ஒரு பன்னிரண்டு வரி இப்படித்தான் எழுதினேன்.

கொஞ்சம் கொஞ்சம் இந்த நடையும் மறைந்து உரைவீச்சு என்ற நடையில் கவிதைகள் எழுதினேன். அதாவது ஒரு வரியை இரண்டாய் மடக்கி மடக்கி எழுதுதல். எழுத்து வலைதளத்தில் நான் கவிதை எழுதிப் பயணித்துக் கொண்டிருந்த போது
மருத்துவர் வ. கன்னியப்பன் ஐயா ஒரு பதிவு போட்டிருந்தார். மனிதனுக்கு எப்படி கண், காது, மூக்கு, கை, கால்கள் எப்படி அளவோடு இருக்கிறதோ?... அதுபோல் கவிதையையும் எதுகை மோனையோடு எழுதுங்கள் என்று போட்டிருந்தார். அதற்குப் பின் ஒரு பந்திக்கு நான்கு வரிகள், வரிக்கு நான்கு வார்த்தைகள் கொண்டு கவிதை எழுதினேன். கிராமிய கவிதைகள் என்றால் அதிலொரு ஆனந்தம். இராசேந்திரன் அண்ணா கவிதைகளைப் பார்த்துப் பார்த்துத் அதையும் எழுதத் தொடங்கினேன்.

அதே எழுத்து வலைதளத்தில் கவின்சாரலன் ஐயா, மரபு கவிதையில் வெண்பா பதிவார். நீங்களும் முயன்று பார்க்கலாம் என்றும் போட்டிருப்பார். நான் கூகுளில் தேடினேன், வெண்பா எழுதுவது எப்படி என்று. படித்தேன் ஆனால் தேமா புளிமா என்று ஒன்றும் புரியவில்லை. பின் ஒருநாள் எழுதினேன், அது வெண்பாவின் வடிவத்தில் மட்டும் இருக்கும். தளைகள் ஒட்டாது இருக்கும். அப்போது கூகுளில் அவலோகிதம் என்ற மென்பொருள் இருக்கிறது, அதில் வெண்பாவை எழுதி சோதித்துப் பார்க்கலாம் என்று சொன்னார். அதில் சென்று எழுத்துகளை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று மாற்றி முதன் முதலாய் ஒரு வெண்பா எழுதினேன். அப்போதும் இப்படி தான் எழுத வேண்டும் என்ற விதி தெரியாது. அப்படி எழுதியதுதான் இந்த வெண்பா.

"பாரை இறங்காதப் பூமியைக் கண்டதும்

எழுதியவர் : இதயம் விஜய் (29-Mar-20, 6:30 pm)
பார்வை : 74

மேலே