உதிரிப்பூக்கள்

கடவுள் உடல் முழுவதும் அலங்கரிக்கும்
பூமாலைகளுக்கு கொஞ்சம் தலைகனம்.
தட்டில் இருந்த உதிரிப்பூக்களைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்க …… உதிரிப்பூக்கள்
' நிறுத்து உன் இந்த ஏளன சிரிப்பை பூமாலைகள்
ஒன்று புரிந்துகொள்ளவும்….. இறைவன் நாமத்தை
அர்ச்சிக்க உதிரிப்பூக்களே வேண்டும்….

உதிரிப்பூக்கள் தொழிலாளர் வர்க்கம்
ஏனைய வர்க்கங்கள் மாலையைப்போல் இருப்பினும்
இறைவன்விரும்பி ஏற்பது என்றும் அவன் நாம அர்ச்சனை
உதிரிப்பூக்களால் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-20, 1:04 pm)
Tanglish : uthirippookal
பார்வை : 81

மேலே