புதிய பார்வையில் கொரோணா
கொரோணா போற்றிபாட வேண்டிய கடவுள்.!
ஆம்!!
ஒரு குடிகாரத்தந்தையை குடிக்காமல்
தனது குடும்பத்துடனும் மகளுடனும்
இருக்க செய்தது யார்?
பெற்றதாயுடன் பேச நேரமில்லாது வேலைவேலை
என்று ஒடிக்கொண்டிருந்தவனை
தாயுடன் நேரம் சிலவழிக்க செய்தது யார்?
தான் மட்டும் நல்லா இருக்க வேண்டும்
என்று எண்ணியவனை
என் பக்கத்துவீட்டுக்காரன் நல்லா இருக்கனும்
என்று வேண்ட வைத்தது யார்?
ஒடிஒடி உழைத்து அழுத்தவனுக்கு
குடும்பத்துடன் ஒய்வு கொடுத்தது யார்?
கடவுளின் பெயரால் வன்முறை செய்துகொண்டிருந்த
மதவெறியர்களை தூக்கியெறிந்து
மனிதனுக்கு மனிதன் தான் உதவ வேண்டும்
மனிதனை மனிதன்தான் காக்க வேண்டும்
என்று உணர்த்தியது யார்?
இன்று எவனும் கூறமாட்டானே எனக்கு
என் சாதிக்காரன் தான் மருத்துவம் பார்க்கனும்
எனது மதத்துக்காரன் தான் மருந்து கொடுக்கனும் என்று,
இதையெல்லாம் நமக்கு உணர்த்தியது யார்?
கொரோணா தானே..!
இப்பொது சொல் மானிடா
கொரோணாவை திட்டுவதா? இல்லை
பாராட்டுவதா?
சொல்...... ,