காதல்

ஒரே ஒரு முறைத்தான் அவளை
நான் பார்த்தேன்
அவள் அழகிற்கு சொற்கள்
தேடினேன் கவிதைப் புனைய
அவள் அருகில் வந்தாள்
புன்னகைத் தந்தாள் புள்ளி மானாய்த்
துள்ளி மறைந்தாள்
சொற்கள் தேடலில் இருந்த நான்
இப்போது அவள் தேடலில்
கவிதை மறந்து கவிதையைத் தேடி
என்னை அறியாமல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-20, 3:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 200

மேலே