அனைத்தும் வாழ்வில் கடந்து போகும்

ஒரு கரு காற்றில் தவழ
நாசிகளால் அதைத் தீண்ட
தெருவழியேங்கும் அழுகையின் ஓலம்!!

காலப் பெருவெளியில் வீசியேறியப்பட்ட
சருகின் கோலமதாய் உலகப்பந்து !!!!

அலங்கோலமாகிவிட்ட கீறல் ஓவியங்கள்..

மக்கிப்போன புதைகுழிகள்
மருதநிலக் காடு இன்று
மனிதரின் புதைகுழி வீடு!!
தேசமே கிருமிகளின் பயணத்தால்
அழுத மேடு...

நாஸ்திகரும் வேதமோதத் துடிக்கும்
கரங்களோ கர்தரைத் துதிக்கும்
பச்சை அங்கிகளே
தெருவெல்லாம் தேரோட்டம்!!!

உலக வல்லாதிக்கப் புயலில்
சுழன்றுபோகும் மூன்றாம் நாடுகள்
தூவியவன் அமைதியாக தூங்குகையில்
ஏந்தியவன் அழுது புலம்புகிறான்!!!

இனிக் கர்தரின் வருகை என்போரும்
இலுமினாட்டிகளின் விளையாட்டு என்போரும்
இந்து மதத்தை இழிவாய்ப் பேசியதால்
வந்த வினை என்போருமாய்
தாங்க முடியவில்லா தொல்லைகள்!!!

சுழலும் பூமி சுழன்றே தீரும்
கதிர் உதிக்கும் திசை மாறாது
நவீனத்தால் தொடரும் புதினங்கள்..
ஆத்மீகமோ அதனுடன் தினமும் பொருதும்...
அனைத்தும் வாழ்வில் கடந்து போகும்...!!

எழுதியவர் : Paulus Albert (1-Apr-20, 2:40 am)
சேர்த்தது : அன்பரசன்
பார்வை : 114

மேலே