அவள் அழகு
காதலியே , நீயோ ஒன்னும் அறியாதவளாய்
என்னைப் பார்த்ததும் தலைகுனிந்து
வெட்கத்தில் ஏதோ கோலம் வரைகிறாய்க் காலால் தரையில்
நானோ உன்னழகில் மயங்கி கவியானேன் கவிதை எழுத
இத்தனை அழகை எப்படி சிறு கவிதையில் அடைப்பேன்,
நினைத்தேன் இந்த பரந்த நீல ஆகாயத்தை காகிதமாக்கி
நீலக்கடல் நீரை மையாக்கி எழுதினாலும் .......
முற்றுப்பெருமா உன்னழகின் கவிதை ..
அவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் இப்போது
நான் நினைத்ததை அவள் கேட்டுவிட்டாளோ
என்று என்னை நினைக்கவிதைத்தாள் இப்போது
கவிதை ஏதும் எழுதவில்லை நான் இப்போது
அவளையே பார்த்து வாயடைத்துபோனேனே!
அவள் அழகில் ஐக்யமாய் !