உயிர் வாழும் காதல்

உயிர் வாழும் காதல்
ஆண் :
உறவா அடி என் உறவா வந்தவள் - நீ தானே
இரவை பகலாய் மாற்றியதும் - நீ தானே
மொழியை காதல் மொழியை
கற்று கொடுத்ததும் - நீ தானே
உலகை இந்த உலகை நம் கண்களுக்குள்
கைதி செய்ய வைத்ததும் - நீ தானே
நெஞ்சில் என் நெஞ்சில் நம் வாழ
கூடு கட்ட வைத்ததும் - நீ தானே
நிச்சயதார்த்தம் உன் நிச்சயதார்த்த
மேடையில் அமர்ந்தவளும் - நீ தானே
பெண் :
உறவே உன் உறவா வந்தவள் - நான் தானே
தாய் என் தாய் தந்தையிடம் நம் காதலை
புரியவைக்க முடியாதவள் - நான் தானே
பட்டு புடவையுடுத்தி இந்த மேடையில்
பட்டும் படாமலும் அமர்ந்தவள் - நான் தானே
அக்கினி குண்டத்தில் இருக்கும் தீ
போல எரிகிறவள் - நான் தானே
என் கண்ணுக்கு மணவறையும் பிணவறையும் சமம்
என்று அமர்ந்தவள் - நான் தானே
ஆண் பெண் :
இருவருடைய காதலை புரியாதவர்களுக்கு
மரணத்தின் மூலம் புரியவைக்க போவதும்
- நாம் தானே
முடிவில்லா உயிர் வாழும் காதலே .....
மு.கா.ஷாபி அக்தர்