காதல்🌹
காதல்🌹
முத்தமிழ் மூன்றையும்
முக்கனி சுவையுள்ள
இதழால் இனிமையாக
பேசும் பைங்கிளியே!
கன்னி தமிழை தேன் குழைத்து அமுதமேன வழங்கிடும் இளம் பாவையே!
மங்கையே! உன் இன்சொல் கேட்டு மயங்கி நின்ற தென்றல்
உன்னை தாலாட்ட தவறாது.
வண்ண மலர்களை
வண்டு அது தீண்டாமல்
உன்னை சுற்றியே ரீங்காரமிடுதே.
வானவில்லின் நிறங்களை
உன் விழிதனில் செலுத்தியது யாரோ
குளிர் நிலவு
உன் முகம் கண்டு நாணி மேகத்துகுள் தன்னை மறைத்து கொண்டது.
கொடி இடை கொண்டு
அண்ண நடை பயிலும் வண்ண மயிலே!
அலங்கார ஊர்வலமே!
உன் மின்சார பார்வை
உள்ளத்தை ஊடுருவி
உவகை தந்து இன்ப ஊற்றெடுத்து மனமெங்கும் காதல்
கங்கை வெள்ளம் போல்
ஆனந்த பரவாகம் எடுத்து ஓடுதே.
வில் புருவம் கொண்டு
அம்பு பார்வையால்
இதயத்தை தாக்கிவிட்டாய்
காயத்திற்கான
மருந்து
உன் சின்ன
கண் அசைவே.
- பாலு.