கவிதைப் போதை தீரவில்லையே

அகன்ற வானம் பரந்த பூமி
இதற்கிடையில் நண்பனே
உனக்காகவும் எனக்காகவும்
சிலவரிகள்
ஒரு நானூறு பாடிவிட்டேன்
அகதிற்காகவும் புறத்திற்காகவும்
அன்பிற்கும் காதலுக்கும்
வானிற்கும் நீரிற்கும் நிலவிற்கும்
பெண்ணிற்கும் அழகிற்கும்
தாசிக்கும் அரசியல்வாதிக்கும் ஏன்
ஞானத்திற்கும் கூட எழுதிவிட்டேன்
போதவில்லையே
இன்னும் இந்தக்
கவிதைப் போதை
தீரவில்லையே
தொடருவோம்
தோழனே
----கவின் சாரலன்