தேயா நிலவு நீ

எத்தனைப் பாடினாலும் என்ன பாடினாலும்
என்னை இன்னும் பாடு என்கிறாயே
என்ன பாடுவேன் என்று எண்ணுகையில்
சித்திரை நிலவாய் வந்து புன்னகைக்கின்றாய்
நீயும் அந்த நிலவு போல்தான்
பார்க்க பார்க்க தணியா பரவசம் தந்து
பாடலாய் எழுத வைக்கும் என்
தேயா நிலவே நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Apr-20, 3:06 pm)
பார்வை : 108

மேலே