நானும் டாக்டர்தான்டா

நானும் டாக்டர்தான்டா. நானும் டாக்டர்தான.
@@@@@
யாருடா அங்க துள்ளிக்குதிச்சுட்டு "நானும் டாக்டர்தான்டா"ன்னு சொல்லிட்டு வர்றது.
@@@@@
அட அவன் நம்ம ரமேசுடா. நம்மகூட பள்ளிலே படிச்சானே அந்த ரமேசு.
@@@@
அவன் எந்த மருத்துவக்கல்லூரில படிச்சான்?
@@@@@
உனக்கே தெரியும்.கொஞ்ச வசதியானவன். மேல்நிலை வகுப்பில அவன் வாங்கிய மதிப்பெண் அறுபது சதவீதம். நாம தாத்தா காலத்து முப்பது சதவீதத்துக்குக்கூட சமம் இல்லை. எப்பிடியோ பணத்தைக் கட்டி ஒரு தனியார் மருத்துவக்கல்லூரில சேந்தான்.
@@@@@@
ஏன்டா அதிக தொண்ணூறு சதவீதம் வாங்கி தேர்ச்சி பெற்ற சிலர்கூட சில பாடங்களில பல்டி அடிச்சு படிப்பு முடியறதுக்குள்ள எல்லாப் பாடத்திலயும் தேர்ச்சி பெற்று பயிற்சி மருத்துவரா பட்டம் வாங்கிட்டு வர்றாங்க. இவன் எப்பிடி...?
@@@@@
நம்ம ரமேசு இல்லாத பல்டி எல்லாம் அடிச்சான். அஞசரை வருசத்தில வாங்க வேண்டிய பட்டத்தை எட்டரை வருசத்தில வாங்கிருக்கான்.
@@@@@@@
அதனால தான் வடிவேலு பாணில "நானும் டாக்டர்தான்டா, நானும் டாக்டர்தான்டா" சொல்லிட்டு துள்ளிக்குதிச்சுட்டு வர்றானா?
@@@@@@
நாமெல்லாம் வேலையில்லாத பி.ஏ. பட்டதாரிங்க. நம்மள எங்க அவன் கண்டுக்கப்போறான். வாங்கடா அவனைப் பாக்காத மாதிரி போயிரலாம்.

எழுதியவர் : மலர் (20-Apr-20, 11:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 135

மேலே