சாமியார் 🙏🏽சிறு கதை

சாமியார் 🙏🏽(சிறு கதை)

தம்பி...
தம்பி..
யாரப்பா அது.
நான் தான்.
தற்கொலை செய்ய கூட உரிமை இல்லையா.
யாருமே இல்லாத இந்த மலை உச்சியில் நீங்கள் யார் பெரிய தொந்தரவு.
தற்கொலை தவறு அல்லவா.
அது என் விருப்பம், நீங்கள் யார் கேட்பதற்கு.
ஒரு உயிர் என் எதிரே மடிவதை நான் எவ்வாறு பார்த்து சும்மா இருக்க முடியும்.
என்னுடைய பிளான் எல்லாம் கேட்டு போச்சு.
யோவ் நீ யாரு...
நான் முற்றும் துறந்த முனிவர் என்று நீ சொன்னால் நம்பவா போகிறாய்.
இப்ப அது ரொம்ப முக்கியமா....
என் பிளான் படி நான் செத்துயிருந்தா இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும்.
ஏன் உயிரை விட அப்படி விரும்புகிறாய்.
அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. காரியத்தை கெடுத்திட்டே.
காரிய காரணம் எல்லாம் அவ்வப்போது அது படி நடக்கும்.
தத்துவம் .....
தத்துவம் தான் வாழ்க்கை.....
யோவ் யார்யா உன்னை இந்த நேரத்தில் இங்க வரசோன்னது....
எல்லாம் அவன் செயல்.
நீ என்ன உண்மையாகவே சாமியாரா....?
யாம் நேற்று தான் ரிஷிகேஷில் இருந்து சென்னை திரும்பினோம்.
வந்த இல்ல, அது ஏன் இப்ப இந்த இடத்துக்கு வந்து என் உயிரை வாங்கர...
உயிரை வாங்கவில்லை உயிரை காப்பாற்றினேன்.
ரொம்ப முக்கியம்.
மிக முக்கியம்.
நீ என்ன சொல்ர...
உன் மரண எண்ணத்தின் காரணம்.
தோ டா... புதிய தலைமுறை பத்திரிகையாளர் கேக்ராரு...
உன் மீது அக்கறை இருப்பதால் கேட்கிறேன்.
நீ என் அப்பா கூட பிறந்த சித்தப்பா பாரு, பெரிய அக்கறை.... எனக்கு வாழ பிடிக்கல்ல.
ஏன். காரணம் என்ன?
நீ தெரிஞ்சுகாம என்ன விட மாட்டாய் போல இருக்கு.
காதல் தோல்வி.
அதற்கு தற்கொலையா?
ஆமாம்.
அட அர்ப மானுடா.
நீ லவ் பண்ணியிருக்கியா...?
சாமியார் உனக்கு லவ் பற்றி என்ன தெரியும்.
விலாவாரியாக சொல்ல முடியுமா.
நீ என்ன பெரிய சினிமா தயாரிப்பாளரா, கதை கேக்கர...
தம்பி, என்னிடம் உன் பிரச்சனை என்ன என்று கூறினால், தீர்வு நான் நிச்சயம் தருவேன்.
எல்லாம் முடிந்து போச்சு. இப்ப எப்படி தீர்வு சொல்லுவ.
நீ உன் கதையை சுருக்கமாக சொல்லேன்.
இரண்டு வருட காதல்.
காதல்ன்னா அப்படி ஒரு காதல் .
எங்க காதல் அந்த பெண் வீட்டில் ஒத்துகில.
நாளைக்கு காலையில அவளுக்கு அவங்க வீட்ல பார்த்த மாபிள்ளையுடன் முறைப்படி கல்யாணம்.
அந்த பெண்னை நீ சந்தித்தாயா, அவளுக்கு இதில் வருப்பமா?
கண்டிப்பா அவளுக்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை.
வேறு வழியின்றி குடும்பத்துக்கு கட்டுபட்டு....
இவ்வளவு தானே
நாளை உனக்கும் நீ விரும்பிய அந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடக்கும்.
யோவ்... சாரி... சாமியார் சார்... நீ என்னையா ...சொல்ர.. சாரி... என்ன சார் சொல்றீங்க...
ஆமாம் நான் சொல்வதை கவனமுடன் கேள்.
இன்று இரவு எப்படியும் நீ உன் காதலியை சந்திக்க வேண்டும்.
எப்படி முடியும்.
முடியும் என்று நினை.
சரி. கண்டிப்பாக நூறு சதவிகிதம் சந்திக்கிறேன்.
அவள் வீட்டார் எவ்வளவு நகை போட போகிறார்கள்.
அது எப்படி எனக்கு தெரியும்.
சரி நகை பத்தி நீ.. நீங்க ஏன்....?
காரணமாக தான்.
புரியலையே...
தம்பி இந்த உலகத்தில் எதற்கும் தீர்வு உண்டு.
நகை, என்ன ஒரு முப்பது பவுன் போட மாட்டாங்களா...
சரி அப்படியே வைத்து கொள்வொம்.
அப்போது முப்பது பவுன் போலி நகை ஏற்பாடு செய்.
இன்று இரவு நானும் நீயும் அவள் வீட்டுக்கு செல்கிறோம்.
அந்த முப்பது பவுன் நகையை நீ வாங்கி என்னிடம் கொடுத்து விட்டு போலி நகையை அவளிடம் கொடுத்து விடு. அப்புறம் பார். எல்லாம் உனக்கு சாதகமா அமையும்.
யப்பா நீ உண்மையான சாமியார் தானா.
அந்த ஆராய்ச்சிக்கு இப்போது உனக்கு தேவையற்றது.
சரி எப்படியோ விஷயத்தை சொல்லி ஒரிஜினல் நகையை உன்னிடம் நான் கொடுத்து பின் நீ நகையை எடுத்துட்டு ஓடிட்டா...
உன் சந்தேகம் நியாயமானது.
இதற்கு நீ தான் பதில் கூற வேண்டும்.
எனக்கு ஒரு யோசனையும் வரவில்லையே....
நான் சொல்லவா...
ஒரு சேப்டி லாக்கர் இப்போதே வாங்கு.
அதன் சேப்டி நம்பர் என்னிடம் சொல்லாதே.
நீயே அவளிடம் பெறும் நகையை அந்த சேப்டி லாக்கரில் வைத்து பூட்டிவிடு.
எனக்கும் அந்த சேப்டி லாக்கருக்கும் உள்ள உறவு என்னுடன் அது நாளை காலை வரை இருப்பது மட்டும் தான். பின் அது உன்னிடம் கொடுக்கப்படும். உன் வாததிற்கே நான் வருகிறேன், நம்பர் தெரியாமல் நான் எப்படி நகையை எடுக்க முடியும். அப்படியே நான் அந்த சேப்டி லாக்கரை எடுத்து கொண்டு ஓடினாலும், நான் யாரிடமாவது கொடுத்து திறக்கிறேன் என்று வைத்து கொள் அப்போது அது எனக்கு தர்மசங்கடமான சூழ்நிலையாக அமையாதா. இன்னுமா என்னை நம்பவில்லை.
மானுடமே உனக்கு பால் எது சுன்னாம்பு எது என்று தரம் பிரித்து பார்க்க தெரியவில்லையே.
சரி...சாமியார் சார் 100% உன்னை நம்பரேன்.
சரி எப்படி கல்யாணத்தை நிறுத்துவ.
அது என்னிடம் விடப்பட்ட செயல்.
நீர் உம்மிடம் சொன்ன செயலை செவ்வண செய்யும்.

இந்தாயா சாமியார் சார்...
எல்லாம் ஒரிஜினல் நகை. லாக்கர் பத்திரம். போலி நகையை அவகிட்ட கொடுதுட்டேன்.
நாளைக்கு சந்திப்போம்.
யோவ் சாமியார் உன்னை தான் மலைபோல்....
மானுடா பயம் வேண்டாம்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

முன் வரிசையில் சாமியார். திருமண ஏற்பாடு ஏக போகமாக.
கதை நாயகன் கல்யாண சத்திரம் வாயலில் யாருக்கும் தெரியாமல். திடீர் சலசலப்பு. " நீங்கள் பைனோட அப்பாவா, பொண்ணுக்கு போடர நகை அத்துனையும் போலியாம்" யாரோ ஒரு பெண் மாப்பிள்ளை அப்பாவின் காதை கடிக்க, அப்புறம் எப்படி கல்யாணம் நடக்கும். நிறுத்துங்கள்.... நிறுத்துங்கள்... கல்யாணத்தை நிறுத்துங்கள்.
சம்பந்தி ஏன், எதற்கு...
யோவ் நீ உன் பெண்ணுக்கு போட்ட நகை அத்துனையும் போலி...
சம்பந்தி இல்லை...இல்லவே இல்லை
சரி, அப்ப ஒரிஜினலா இல்லை போலியான்னு பார்ப்போம்.
நகை சரிபார்க்கபட்டது. நகை அத்துனையும் போலி என தெரியபடுத்த கல்யாணம் நின்றது. மாப்பிள்ளை வீட்டார் கம்பி நீட்டிவிட்டனர்.
பெண்ணின் தகப்னார் கண்ணீருடன் காட்சியளிக்க, கதாநாயகன் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எப்படியோ அவன் காதலித்த பெண் கழுத்தில் அதே முகூர்த்தத்தில் தாலி கட்டிணான். வெற்றி குறியை சாமியாருக்கு காண்பித்தான். சாமியார் ஆசீர்வாதம் செய்தார் அங்கிருந்த படியே.
திருமண நல்லபடியாக முடிந்தது அவனுக்கு மிக பெரிய சந்தோசம்.
சாமியார் சொன்னபடி நகை அடங்கிய லாக்கர் பெட்டியை அவனிடம் கொடுத்தார்.
தம்பதிகள் இருக்கும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
சாமியார் விடை பெற்றார்.


ஒரு மணி நேரம் கடந்த பின் கதாநாயகன் கைபேசி அலறியது.
ஆவலுடன் எடுத்தான்
" யாரு"
" என்ன புது மாப்பிள்ளை, சவுக்கியமா,
சந்தோஷமா"
"நீங்கள் யாரு"
" மானுடா"
" சாமியார் சார், எங்க இருகீங்க"
"சென்னை ஏர்போர்ட் "
" என்ன சொல்ரீங்க"
" ஆமாம், டெல்லி பயணம்:
" உங்களை என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
" சரி நகை எல்லாம் சரியா இருக்கா"
" என்ன சாமியார் சார். உங்க மேல அதீத நம்பிக்கை உள்ளது "
" கொஞ்சம் லாக்கரை திறந்து பார்"
" இதோ... எல்லாம் சரியா இருக்கு"
" எல்லாம் சரியாக இருக்கும், ஆனால் அத்துனையும் போலி ".
" போலியா.. "
" லாக்கர் நம்பர் உனக்கு"
" மானுடா... மக்கு மானுடா... திருட்டு என் தொழில்..நம்பர் பூட்டு திறப்பது...மேட்டரே இல்லை. "
" இது அநியாயம்"
" எது அநியாயம், கொஞ்சம் யோசி, உன் உயிரை யார் காபாற்றியது. உன் திருமணம் நடக்க யார் யோசனை சொன்னது.
உன் பிரச்சனை எல்லாம் தீர்வு கிடைத்துவிட்டது. உன் பிரச்சனை தீர்ததுக்காக எனக்கு நீ கொடுத்த சன்மானம் அந்த முப்பது பவுன் நகை"
" அப்ப நீ சாமியார் இல்லையா"
" நான் மனித மனதை எளிதில் எடை போடும் சாமியார், ஒன்னு சொல்லட்டுமா , இந்த உலகத்தில் ஏமாறுவபன் தான் ஏமாற்றுபவனுக்கு முதலீடு, வாழ்க நீ பல்லாண்டு "
" யோவ் பிராடு "
" பிராடு இல்லை பர்பெக்ட்
கிரிமினல் "


- பாலு.

எழுதியவர் : பாலு (22-Apr-20, 9:29 pm)
சேர்த்தது : balu
பார்வை : 114

மேலே