ரேனுஸ்ரீ-19

அனைவருக்கும் வணக்கம்,
காலதாமதத்திற்காக மன்னிக்கவும்,ரேனுஸ்ரீ என்னும் கதை இத்தோடு முடிகிறது,ரேனுஸ்ரீ கதையை படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது என்னை மேலும் எழுத உக்கவிக்கும்,அதுமட்டும் மின்றி என்னுடைய குறைகளை நிறையாக்கி கொள்ளவும் உதவும்,விருப்பம் இருந்தால் கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.
நன்றி....
renushree 19 :

இறுதியாக ரேணுவிற்க்கு அவளுடைய காதல் கிடைத்தானது.
அம்முவும்,உதையும் ஸ்ரீ சொன்ன விலாசத்திற்க்கு வந்து ரேணுவை அழைத்து சென்றனர்,ரேணு அங்கிருந்து செல்வதை பார்த்தபடி ஸ்ரீ அவனுடைய காதல் பயணத்தை ஒட்டி பார்க்க ஆரம்பித்தான்.....

(ரேனுஸ்ரீ கதையை படித்த சிலருக்கு ஸ்ரீயின் காதலைவிட ரேணுவின் காதல் பெரிதாக தெரிந்திருக்கலாம் அதற்க்கு காரணம் நாம் இந்த கதையை ரேணுவின் இடத்தில்/கோணத்தில் இருந்து பார்த்ததினால்தான்.
நிஜத்தில் கூட நாம் அனைவரும் நம்முடைய கோணத்தில் இருந்துதான் அனைத்தையும் பார்க்கிறோம்,அதனால் தான் சில சமயங்களில் நாம் சரி என்று நினைப்பதெல்லாம் சரியாகவும்,தவறு என்று நினைப்பதெல்லாம் தவறாகவும் நமக்கு தோன்றுகிறது.)

இப்போது ரேணு அறிந்திடாத ஸ்ரீயின் காதலை ஸ்ரீயின் கோணத்தில்(point of view ) இருந்து பார்க்கலாம்.

எட்டு வருடங்கள் கழித்து ஸ்ரீ ரேணுவை கண்ட போது அதாவது இரண்டு மணிநேரங்களுக்கு முன் 11 .05 .2011 நேரம் மதியம் 3 .32 .
ஸ்ரீ வரப்பின் மீது மரத்தடியின் நிழலில் நின்று ரேணு கொடுத்த கீசெயினை கையில் வைத்து பார்த்தபடி அவனுடைய நெருங்கிய பள்ளி நண்பர்களான ராம் மற்றும் ராஜ்ஜிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
பேசும் போது ஸ்ரீ ரேணுவை கண்டதாக அவர்களிடம் கூறினான்.அதை கேட்ட ஸ்ரீயின் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீ,ரேணுவை பற்றி அவன் நண்பர்களிடம் பேசி பல வருடங்கள் ஆகியதால் ஸ்ரீ அவர்களிடம் உங்களுக்கு அவளை நியாபகம் இருக்கிறதா என்று கேட்டான்.

எப்படி எங்களால் மறக்க முடியும்,இத்தனை வருடங்களில் அவள் ஒருத்தியை தவிர வேற எந்த பெண்ணை பற்றியும் நீ எங்களிடம் பேசியதில்லை என்றான் ராம்.

ரேணுவிடம் ஏதாவது பேசினாயா என ராஜ் ஸ்ரீயிடம் கேட்டான்.

அதற்க்கு ராம்,அவன் நிச்சயமாக பேசி இருக்கமாட்டான்,என்ன ஸ்ரீ?என்று கேட்டான் ராம்.

ம்ம்ம்...,என்னால் அவளிடம் பேச முடியாது,அது உங்களுக்கும் தெரியும் என்று கூறினான் ஸ்ரீ.

நீ இன்னமும் அந்த சத்தியத்திற்கு முக்கியத்துவம் தருகிறாயா?,நீ எப்போதோ செய்த சத்தியத்தை இன்னமும் எதற்காக நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் ராஜ்.

சத்தியம் என்பது மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் என்னக்கு அது வெறும் வார்த்தை அல்ல என்றும் தான் அதை மதிப்பதாகவும் கூறியபடி சைக்கிளின் பெல்லை விட்டு விட்டு அடித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீ.

பின்பு ஸ்ரீ ரேணுவின் தந்தையின் பெயர் கோபால் என்றும் அவர் LIC யில் பணிபுரிவதாகவும்,மேலும் அவளை பற்றின தகவல்களை தெரிந்துகொண்டு தன்னிடம் கூறுமாறும் தன் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டான்.

மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ராஜ் அவனுடைய அம்மா அவனை அழைப்பதாக கூறி ராமின் கையில் பேசியை கொடுத்தான்,ராமும் ஸ்ரீயும் சிறிது நேரம் பேசிவிட்டு கைபேசி தொடர்பை(call) துண்டித்தனர்..

ஸ்ரீ ரேணுவை பற்றி யோசித்தபடி சைக்கிளை வரப்பில் இருந்து கீழே இறக்கி ஓட்ட ஆரம்பித்தான்,காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது,பலத்த காற்றின் ஓசையுடன் கலந்து ஹே என ஒரு மெல்லிய குரலின் ஓசையும் அவன் காதில் விழுந்தது,அதை கேட்டபடி ரேணுவின் நினைப்பில் முழுதாய் முழுகி இருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு திடிர்யென அவன் விரலில் மாட்டி இருந்த கீசெயினை காணவில்லை என பதறி தேட ஆரம்பித்தான்,பின்பு கீசெயினை தேடி இறுதியாக அவன் நின்றிருந்த இடத்திற்கு சென்றான்.

அங்கு ரேணு அவன் நின்றிருந்த மரத்தின் மீது சாய்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

பிறகு ரேணு அமைதியாக அமர்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருப்பதை பார்த்தபடி மெல்ல அவள் அருகில் செல்ல ஆரம்பித்தான்,அப்போது ரேணுவிற்க்கு அவள் ஸ்ரீக்கு கொடுத்த கீசெயின் கையில் கிடைத்தது,அதை பார்த்து ஸ்ரீ என்று கூறி புன்னகித்தபடி அழுத்தத்தை கண்டு அவன் மனம் உடைந்தது.

ரேணு அவனை பின்தொடர்ந்து வந்திருப்பதை உணர்ந்த ஸ்ரீ,அவள் நம்மை பின்தொடர்ந்து வருகிறாள் என்பதை கூட உணராமல் போய் விட்டோமே என்று நினைத்து அவன் மீது அவனே கோபம் கொண்டான்.
அந்த நிமிடம் ஸ்ரீக்கு ரேணுவின் மீது இருந்த விருப்பம் காதலாய் மாறியது.

அப்போது ரேணு அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து ஸ்ரீயை பார்த்தால்,ஸ்ரீ ரேணுவின் கால் விரல்களில் இருந்த ரத்தத்தை பார்த்து நம்மை பின்தொடர்ந்து வரும்போது கீழே விழுந்திருப்பாளோ என்று நினைத்து மனம் நொந்து அவளை பார்த்தபடி நின்றான்.

ரேணுவிற்கு உதவ முடியாத நிலையில் இருப்பதால்
கீசெயினை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட நினைத்து அவளை பார்த்து கையை நீட்டினான்,கீசெயினை கேட்கிறான் என்பதை அறியாதவள் அவளின் கையை அவனிடம் கொடுக்க வந்ததை பார்த்து முற்றிலுமாய் உடைந்து போனான்,அவனுடைய உணர்ச்சியை வெளிக்காட்டாமல் அவளிடம் இருந்து கீசெயினை வாங்கிக்கொண்டு அவன் தாயை தொலைபேசியில் அழைத்தபடி அங்கிருந்து தூரமாக சென்றான்.

ஸ்ரீ அவன் தாயிடம் ரேணுவை கண்டதாகவும் தன்னை பின்தொடர்ந்து வந்து காயப்பட்டு நிற்பதாகவும் அதனால் அவளிடம் பேசுவதற்கும்,அவளை வீட்டிற்க்கு அழைத்து வரவும் அனுமதி கேட்டான்.

நிலைமையை புரிந்து கொண்ட ஸ்ரீயின் அம்மா அவனுக்கு அனுமதியை வழங்கினார்,ஆனால் ஸ்ரீ அவனுடைய சத்தியத்தை முழுதாய் நிறைவேற்றினால் மட்டுமே அவர் அவருடைய சத்தியத்தை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.அதற்க்கு ஸ்ரீ ஒப்புக்கொண்டு சரி என்று கூறினான்.

பின்பு ஸ்ரீ சைக்கிளை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு வீட்டிற்க்கு சென்று ஒரு குடுவையில் நீர் கொடுக்குமாறு கேட்டு வாங்கிக்கொண்டு மீண்டும் ரேணுவிடம் சென்றான்..

அதே நாள்(11 .05 .2011 ) நேரம் மதியம் 2 .02 மணிக்கு
ஸ்ரீ எட்டு வருடங்கள் கழித்து ரேணுவை பிள்ளையார் கோவிலில் கண்டான்,அமர்ந்திருந்த ரேணு எழுவதற்காக அவள் தோழியின் கையை குழந்தையை போல பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான்,பின்பு அங்கிருந்து செல்ல மனமின்று சென்றான்.

ஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு நாள் அவன் கையில் கிடைத்த கல்யாண பத்திரிகையில் மணப்பெண்ணின் பெயர் ரேணு என்றும் மணமகனின் பெயர் ரவி என்றும் இருந்ததை பார்த்தான்,ஸ்ரீயினால் ரேணு என்ற பெயருடன் வேறு ஒரு பெயரை சேர்த்து வைத்து பார்க்க முடியவில்லை அதனால் மணமகனின் பெயருக்கு பதிலாக அவனுடைய பெயரையும்,மணமகளின் பெயரை ரேனுஸ்ரீ என்றும் எழுதி அதை பார்த்து புன்னகித்துக்கொண்டிருந்தான்.

அப்போது எதையோ தேடிக்கொண்டு அங்கு வந்த ஸ்ரீயின் அம்மா அந்த பத்திரிக்கையை ஸ்ரீயின் கையில் இருந்து எடுத்தார்.

ஸ்ரீ அதிர்ச்சியோடு அவன் அம்மாவை பார்க்க,இதை தான் வீடு முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியபடி அதை பிரித்து பார்த்தார் ஸ்ரீயின் அம்மா.

திருமண பத்திரிகையில் ஸ்ரீ செய்து வைத்த மாற்றத்தை பார்த்த ஸ்ரீயின் அம்மா அதிர்ச்சியோடு ஸ்ரீயை பார்த்து என்ன இது என்று கேட்டார்.

ஸ்ரீ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.
கோவம் அடைந்த ஸ்ரீயின் அம்மா ஸ்ரீயின் கன்னத்தில் ஒரு அரைவிட்டு நாளை தேர்வை வைத்துக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று சத்தமிட்டார்.

ஸ்ரீ அவன் செய்ததை நினைத்து வருந்தியபடி குனிந்த தலையோடு தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு நின்றான்.

அவர் அழுதபடி ஸ்ரீயை பார்த்து முதல் முறையாக உன்னை சரியாக வளர்க்க தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது என்று கூறி அங்கிருந்து சென்றார்.

அதன் பிறகு பல நாட்கள் ஆகியும் ஸ்ரீயின் அம்மா ஸ்ரீயிடம் பேசவில்லை,ஸ்ரீ பல மனவலிகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்தான்.

சில நாட்களுக்கு பிறகு தேர்வு முடிவுகளும் வெளியானது,ஸ்ரீ 486 மதிப்பெண் வாங்கி தேர்ச்சி அடைந்தான்,ஸ்ரீயின் அம்மா ஸ்ரீயை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்,ஸ்ரீ அவன் அம்மாவிடம் தான் செய்தது தவறுதான் என்றும் தன்னை மன்னிக்கக்கூறியும் அழுதான்,ஸ்ரீயின் தையும் அவனை மன்னித்து அவனிடம் பேசினார்.

பிறகு ஸ்ரீயின் அம்மா ஸ்ரீயிடம் ரேணு என்பது யார் என்று கேட்டார்,ஸ்ரீ தயங்கியபடி இருவரும் ஒரே பள்ளியில் பிடித்ததாகவும் அவளிடம் ஒரே ஒரு முறை பேசியதாகவும்,மிகவும் நல்ல பெண் என்றும்,அவள் என்றால் அவனுக்கு மிக பிடிக்கும் என்றும்,அவளை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகியும் அவளை மறக்க முடியவில்லை என்றும் மிக நேர்மையாக பதில் அளித்தான்.

இதையெல்லாம் கேட்டவுடன் ஸ்ரீயின் அம்மாவிற்க்கு பயம் வந்தது,எங்கே படிக்கும் வயதில் காதல் கீதல் என வழிமாறி சென்றுவிடுவானோ,ஸ்ரீயின் எதிர்காலம் வீணாகிவிடுமோ என்று நினைத்து பயந்தார்.

என்னசெய்வது என்று யோசித்த ஸ்ரீயின் அம்மா ஸ்ரீயிடம்
சரி இனி இதை பற்றி பேசவேண்டாம்,நீ நன்றாக படித்து முடித்து,நல்ல வேலைக்கு சென்று,உன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி நீயே பார்த்துக்கொள்ளும் நிலை அடைந்த பிறகு அப்பொழுதும் இந்த பெண்ணை உனக்கு பிடித்திருந்தால்,அவளுக்கும் உன்னை பற்றின நியாபகம் இருந்தால்,தானே முன் நின்று இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும்,அதுவரை நீ அந்த பெண்ணை பார்க்கவோ,பேசவோ,நினைக்கவோ மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய் என கேட்டார்.

ஸ்ரீ அவனுடைய அம்மாவை குழப்பத்தோடு பார்த்தபடி நான் அவளை வெறும் பிடித்திருக்கிறது என்று தான் கூறினேன் என்று கூறி நீங்கள் ஏதும் கவலை படவேண்டாம்,நான் அவளை தேடி சென்று பாக்கவோ,பேசவோ மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.

ஆறுதல் அடைந்த ஸ்ரீயின் அம்மா ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து செல்வதற்காக எழுந்தார்,அப்போது ஸ்ரீ அவன் அம்மாவை அழைத்து ஒரு வேலை நீங்கள் கூறிய அனைத்தையும் நான் செய்து முடித்தாள் நீங்கள் செய்வதாக கூறியதை செய்வீர்களா என கேட்டான்.

ஆச்சிர்யத்தோடு ஸ்ரீயை பார்த்த அம்மா தயக்கத்தோடு தலையை ஆட்டினார்.

ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவன் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்ச்சிக்கு ரேணு வந்திருப்பதை கண்டான்.
ரேணுவின் பக்கத்தில் ஒருவன் நிற்பதையும்,அவளின் எதிரே இருவர் நிற்பதையும் பார்த்தான்,அவர்கள் என்ன பேசுகிறார்கள் என ஸ்ரீக்கு கேட்கவில்லை,ஸ்ரீ பள்ளி நுழைவாயின் அருகில் நின்றபடி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான்.
திடிர்யென ரேணு கோவமாக அங்கிருந்து சென்றதை பார்த்துவிட்டு தன்னுடைய நண்பர்களிடம் என்ன ஆனது என்று விசாரிக்குமாரு கூறினான்.
ஸ்ரீயின் நண்பர்களும் விசாரித்துவிட்டு ஸ்ரீயிடம் அனைத்தையும் கூறினர்.
ஸ்ரீ நேராக,ரேணு தன்னை விருப்புவதாக கூறியவனிடம் சென்று ரேணு என்னுடைய தந்தையின் மகள் என்றும் நீ சிறிது நேரத்திற்கு முன் கூறியதை வந்து ரேணுவின் தந்தையிடம் கூறக்கூறி அவனை அழைத்தான்,பயம் அடைந்த அவன் ஸ்ரீயிடம் இங்கு உள்ள நிறைய மாணவர்கள் அவளிடம் வழிந்தனர் அதனால் தான் அவளுடைய நன்மைக்காக அவ்வாறு பொய் கூறினேன் என்றும்,ரேணுவின் மீது எந்த தவறும் இல்லை என்றும் ரேணுவின் தந்தையிடம் ஏதும் கூறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான்..
சிறுமி என்றும் பாராமல் அனைவரும் அவளிடம் வழிகின்றனர்,ஏன் அனைவரும் இவ்வாறு இருக்கின்றனர் என தன்னுடைய நண்பர்களிடம் கூறி ரேணுவை நினைத்து வருந்தினான் ஸ்ரீ.

ஸ்ரீ எட்டாம் வகுப்பு படிக்கும் போது,
5 .12 .2002 அன்று,
ஸ்ரீயின் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அப்போது வகுப்பிற்குள் வந்த ஒரு சிறுவன் ஆசிரியரை பார்த்து"சார் பிரின்சிபால் சார் யாராவது ஒரு அண்ணாவ வர சொன்னாரு"என்றான்.
ஆசிரியர் ஸ்ரீயை போகும்படி கூறினார்.
ஸ்ரீயின் நண்பன் ராம் ஸ்ரீயிடம் தன்னையும் உடன் அழைத்து செல்லுமாறு வேண்டினான்,ஆசிரியரின் அனுமதியோடு இருவரும் பிரின்சிபால் அறைக்கு சென்றனர்.
பிரின்சிபால் அவர்களிடம் ஒரு கனமான புத்தகத்தை கொடுத்து அனைத்து ஆசிரியர்களிடமும் கையெழுத்து வாங்கி வருமாறு கூறினார்.

அப்படி கையெழுத்து வாங்குவதற்காக ஆறாம் வகுப்பு "பி"பிரிவிற்க்கு வந்தான் ஸ்ரீ.
ஸ்ரீயுடன் ஒன்றாக டியூஷன் படிக்கும் பானு என்ற சிறுமி அவனை கண்டதும் மகிழ்ச்சியோடு "ஸ்ரீ அண்ணா" என்று மெதுவாக அழைத்து கையை ஆட்டினாள்,அவனும் அவளை பார்த்து புன்னஹித்து விட்டு ஆசிரியரை பார்த்தான்,
ஆசிரியர் உட்கார்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார்.

அதை பார்த்த ஸ்ரீ ராம்மிடம் என்னடா உறங்கிக்கொண்டிருக்கிறார் என்றான்.

அதற்க்கு ராம் வேடிக்கையாக புன்னகித்தபடி இந்த பூதத்தை வீடு,கீழே அமர்ந்துள்ள குரங்கு குட்டிகளின் சேட்டையை பார் என்றான் ராம்.

ஸ்ரீ ஒரு நொடி மேலோட்டமாக அவர்களை பார்த்து விட்டு மீண்டும் சலிப்போடு ராமின் கையில் அந்த லெட்ஜரை/file கொடுத்து ஆசிரியரை எழுப்பி கையெழுத்து வாங்குமாறு கூறினான்.

ராம் நானா!என்பது போல ஸ்ரீயை பார்த்தான்.

என்ன?நீ தானே என்னுடன் வருகிறேன் என்று ஆடம் பிடித்து வந்தாய்,எழுப்பி கையெழுத்து வாங்கு என்று கூறிவிட்டு தன்னுடைய கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான் நேரம் 11 :11 ,நேரத்தை பார்த்துவிட்டு எதிரே பார்த்த போது ஒரு மாணவி மட்டும் புத்தகத்தைவைத்து படித்துக்கொண்டிருந்தாள்.
அவள் தலையை குனிந்து இருந்ததால் அவளின் முகத்தை முழுதாக பார்க்க முடியவில்லை சிறிது பின்னே சென்று தலையை சாய்த்து பார்த்தான் அவளும் எதையோ யோசித்தபடி தலையை சிறிது உயர்த்தினாள்,அவளின் முகத்தை பார்த்த சில நொடிகளிலேயே அவனுடைய நண்பன் கையெழுத்து வங்கியானது என்று கூறி அவனை அங்கிருந்து அழைத்து சென்று விட்டான்.

கவலையுடன் எதையோ யோசித்து கொண்டிருந்த ஸ்ரீயை பார்த்த ஸ்ரீயின் நண்பர்களான ராம் மற்றும் ராஜ் என்ன என்று கேட்டனர்.

ஸ்ரீ ஒரு சிறுமியை கண்டதாகவும் அவளை கண்டத்தில் இருந்து ஏதோ சொல்ல தெரியாத ஒரு வலியையும், நெருக்கத்தையும் உணர்வதாகவும்,இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் மிக நெருக்கமானவர்களை நீண்ட வருடங்கள் கழித்து சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது என்றும்,அவளை மீண்டும் மீண்டும் காண வேண்டும் என்று தோன்றுவதாகவும் தன் நண்பர்களிடம் கூறினான்.

அன்று பள்ளி முடிந்த பிறகு பெயர் தெரியாத அவனுடைய யாரோ ஒரு சிறுமிக்காக மூன்று சிவப்பு நிற ரோஜா அட்டையை கொண்ட ஒரு வாழ்த்து அட்டையை வாங்கினான் ஸ்ரீ.

முற்றும்........

எழுதியவர் : அனுரஞ்சனி (23-Apr-20, 12:23 am)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 115

மேலே