கொரோனாவின் கவிதை

கொரோனாவின் கவிதை.
‍‍‍‍‍________________________________ருத்ரா.
‍‍‍
மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்.
..................
இந்த மனிதன் வாழுமிடத்தில்
பறவைகள் ஏது?
மான்கள் ஏது?
அவை எல்லாம்
சிறைக்கூண்டுகளில்.
அவனே
"மாத்தி யோசி" என்றானே
என்று
நானும் மாத்தி யோசித்தேன்.
ஆர் என் ஏ "டெக்ஸ்ட் புத்தகங்களிலிருந்து"
நானும்
வெளியே வந்து விட்டேன்.
அவர்கள் இப்போது
கூண்டுகளில்.

____________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (23-Apr-20, 10:53 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 166

மேலே