நெடுஞ்சாலை
அன்றைய காலகட்டத்தில் -
ஒவ்வொரு முறையும்...
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்பேது...
வாகன பரிசோதனையில்.....
அதிகாரிகள் என்னிடம் கேட்பார்கள் :-
யோவ்..
வண்டியில என்னய்யா வச்சிருக்க..
ஒன்னுமில்ல சார்..
வெறும் துணிதான் சார்...
யோவ் பொய் சொல்லாத..
உண்மை சொல்லு...
உண்மையா துணிதான் சார்..
கொஞ்சநேரம் வெயிட்பன்னு செக்பன்னிட்டு அனுப்புற..
சரியென்று தலையசைத்து
காத்திருப்பேன்.....
அவர்கள் பரிசோதனையிடுவார்கள்...
பரிசோதனையின் முடிவில்...
ஏதும் கிடைக்காமல்...
சரி..
சரி...
ஏதாச்சும் கவனிச்சிட்டு போ.. என்பார்கள்
வேறு வழியின்றி..
பயணம் தொடர...
என் டீ செலவு காசை
அவர்களின் டீ செலவுக்கு கொடுத்துவிட்டு புறப்படுவேன்...
ஆனால்...
இன்று
இந்த தேசிய நெடுஞ்சாலையில்...
என்னையும்
என் வண்டியையும் முடக்கிவிட்டார்கள்...
காரணம் ஊரடங்கு என்றார்கள்...
நானிருந்த இடத்தில்...
என்னை கவனிக்கவே ஆளில்லை
குடிக்கும் குடிநீருக்கும் வழியில்லை
உண்ணும் உணவிற்கும் வழியில்லை
சொந்தம்ன்னு சொல்லவும் ஆளில்லை
எப்படி நகர்த்துவது என் நாட்களை என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்...
என் வண்டியிலிருந்த
என் ரேடியோவிலிருந்து வந்தது ஒரு வீரவசனம்...
" நீங்கள் எல்லோரும் போர்வீரர்கள் - நாளைய வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுவீர்கள்......"
வீரவசனத்தை கேட்டு எனக்குள் சிரிப்புதான் வந்தது...
இன்னிக்கு வாழவே வழியில்லையா..?
இதல போர்வீரன்.. வரலாறன்னு...சொல்லிக்கிட்டு...
இங்க வந்து...
இந்த தேசிய நெடுஞ்சாலையில...
எங்க கூட இருந்து வாழ்ந்து பார்த்தா தெரியும்...
எங்க நிலைமை என்னான்னு...
சார்..
சும்மா... இந்த வீரவசன பொய்யெல்லாம் பேசிக்கிட்டு இருக்காம்மா...
எங்களை எங்க குடும்பத்தோடு சேர்க்கிற வழியைப் பாருங்க...
வறுமையில நடுரோட்ல சாகறதவிட , வீட்டுக்கு போயி...
ஒருமுறை பொண்டாட்டி புள்ளைகள பார்த்துட்டு சாகற...."
இன்னிக்கு இந்தியாவில இரண்டே இரண்டு மனிதர்கள்தான் :-
எப்படிடா ஒவ்வொரு நிமிஷத்தையும் கழிக்க போறோம்ன்னு நினைக்கிறவங்க -
எப்படிடா ஒவ்வொரு நிமிஷத்தையும் வாழப்போறோம்ன்னு நினைக்கிறவங்க-
நான் இதில் இரண்டாவது ரகம்.....!!!
( தேசிய நெடுஞ்சாலையில் சிக்கியவன் )
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி