என் மனம் ஏங்குதடி
காற்றை பிடித்து
கயிறாய் முறித்து
சரிந்து விழும்
உன் ஒற்றை முடியின்
ஒரு முனையில்
கட்டி இறுக்கி
அதன் மறுமுனையை
உந்தன் காதோரம்
குதித்து குலுங்கி விளையாடும்
கம்மலில் கட்டி
ஊஞ்சல் ஒன்று செய்து
அதில் அமர்ந்து
ஆனந்தமாய் ஆடிக் கொண்டே
உன் அழகை ரசிக்க
என் மனம் ஏங்குதடி!!
❤சேக் உதுமான்❤