206 நினைத்தல் செய்தல் நிறுத்தலில் வஞ்சித்தல் ஆகியன களவே – களவு 1
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
களவு செய்குதன் மனத்தினில் நினைக்குதல் கவரென்(று)
உளம கிழ்ந்(து) உபதேசித்தல் உதவிசெய்(து) ஒழுகல்
வளமி லாப்பொருண் மாறுதன் மிகுவிலை வாங்கல்
அளவி னும்நிறை தனினும்வஞ் சித்தப கரித்தல். 1
- களவு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை;
”களவு செய்ய தன் மனதில் நினைப்பது,
பிறர் பொருளைக் கவர்ந்து கொள் என்று உள்ளம் மகிழ்ந்து வழி சொல்லிக் கொடுப்பது,
களவு செய்ய உதவி செய்வது,
பழுதான பொருளை விற்பது,
விற்கும் பொருளுக்கு அதிக விலை வாங்குவது, அளப்பதிலும், நிறுப்பதிலும் ஏமாற்றிக் கொள்ளை யிடுவது ஆகிய செயல்கள் அனைத்தும் களவே” என்கிறார் இப்பாடலாசிரியர்.