புது தம்பதிகள்
நீரினால் அணையும் தீபோல்
உன் அன்பினால் அணைந்துவிட்டேன்
உனக்கென்று வாழும் மனதிலே
அன்புநிறைந்த கோவிலொன்று எழுப்பி
தினந்தோறும் கண்டேன் மார்கழி
கனி நிறைந்த மாதோப்பை கண்டு
ஊராற் கண் உற்றுநோக்கும்
புரியாத புதிா்வொன்றை ஏவி
பதியாத மனதில் பதியவைத்து
பிரியாத மனதை பிாிப்போா்
வாழும் யுகத்தில் சிக்கிவிடாதே
சில்லென்று வீசும் பருவகாற்று
நெடுந்தூர பயணத்தில் திசைமாறது
என்னை ஆளும் உன்கரங்கள்
பிறா்கரங்களால் பணியவிடாமலிருந்தால்
நம்மைப்போல் வானில் சிறகடித்து
பறந்திடும் பறவை உண்டோ!!!!!..